NFPE AIPEDU
NFPE AIPEDU NFPE
அகிலஇந்திய
அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள்
(P3, P4, AIPEDEU)
சிவகங்கை
கோட்டம், சிவகங்கை-630561
பன்னீர் செல்வம், GDSMD, அஞ்சலி
புறமுதுகு
காட்டா புறநிலை ஊழியராய்
தொழிற்சங்க
அறமறிந்த தீவீரத்தொண்டனாய்
திருப்பத்தூர்
பகுதி தோழர்கள் கரம் உயர்த்த
நேரம்பாராதுழைத்து
,தொழிற்சங்க கோட்டையின்
இரும்புத்தூணாய்
நின்ற தோழா!!
அமைதிப்பெருங்கடலாய்
,பொறுமையில்
இமயமாய் உயர்ந்து
நின்று ,வம்புசெய்
தீங்கினர்களுக்கும்
அன்புதடன் தபால் சேவை செய்த தோழா!!
தந்தையும்,
தாயுமாய் நீ பேணிவளர்த்த புதல்விகளுக்கு
பன்னீர்
புஸ்பமாயிருந்த செல்லவமே!
கண்ணிமைக்கும்
நேரத்தில் பஸ்பமாய் மாறியதேனோ!
நீ செய்த
வெற்றிடத்தை யாரேனும் நிரப்பிடலாம்!
நிரம்பியது
காணல் நீராக இருக்குமே தவிற பன்நீராக முடியாது!
செங்குருதி
ஓடையாகி ஆடையெல்லாம் சிவப்பாகி
அகால
மரணமடைந்த தோழா உனக்கு கண்ணீர் மட்டும்
காணிக்கையாக்க
முடிந்தது.
எனவே அனைத்துத் தோழர்களும், தோழியர்களும் தங்களால் இயன்ற நிதியுதவி
வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

S. குருநாதன்
U. சந்திரன்
M.கருப்புச்சாமி
(GDS, செயலாளர்) (P4, செயலாளர்) (P3,
செயலாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக