பிப்ரவரி 21, 2012

NFPE NFPE NFPE
அகிலஇந்தியஅஞ்சல் ஊழியர்கள் சங்கம்
(P3,P4,GDS)
சிவகங்கை கோட்டம்,சிவகங்கை-630561
http://www.nfpesivaganga.blogspot.com/

சுற்றறிக்கை : 8 தேதி : 20-02-2012
28.02.2012 அன்று ஒரு நாள் நாடு தழுவிய
வேலைநிறுத்தம்.




அன்புத்தோழர்களே ! தோழியர்களே.!


வணக்கம்.,

அகில இந்திய அளவில் BMS,INTUC,AITUC, CITU, HMS,LPF,SEWA உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் சேர்ந்து INTUC பொது செயலாளர் தலைமையில் அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சேர்ந்து 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 28.02.2012 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக நமது அஞ்சல் துறையில் NFPE ,FNPO உள்ளிட்ட அனைவரும் வேலைநிறுத்தம் செய்வதென 10-02.2012 தேதியில் மத்திய அரசுக்கு NOTICE வழங்கப்பட்டுள்ளது. அதன்விளைவாக நமது கோட்டத்தில் 19-2-2012 அன்று நடைபெற்ற பொதுகுழுக்கூட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு மாதம் இருமுறை பெட்ரோல் விலைஉயர்வு செய்துகொள்ளும்படி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்விளைவாக விலைவாசி உயர்வு ஏறுமுகத்தில் உள்ளது.2004 க்குப் பின் புதிதாக பணியில் சேர்ந்தஅனைத்து ஊழியர்களின் புதிய பென்சன் திட்டத்தில் தான் சேரவேண்டும்.ஆனால் MINIMUM PENSION எவ்வளவு என்று இன்றுவரை அறிவிக்கவில்லை.ஊழியர்கள் இறந்தால் அவரது கணக்கில் உள்ள தொகை மட்டும் வழங்கப்படுகிறது.
போராடும் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக தற்பொழுது உள்ள தொழிற்சங்க நலச்சட்டங்களைமுடக்குகின்றன. மக்களின் சமூகபாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயப்படுத்த அரசின் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் திருத்தப்படுகின்றன.

22 அம்சகோரிக்கைகள்:
1. விலைவாசிஉயர்வை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
2. பெரும் வர்த்தக நிறுவனங்களுக்குதொழில் துவங்க, அரசால் பல்வேறு சலுகைகள் வழங்கும் போதே வேலை வாய்ப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
3. ஊழியர் குறைப்பு,அரசு பணிகளை தனியார் மயமாக்கல், அவுட்சோர்சிங், மற்றும் கான்ட்ராக்ட் முறையை அமல் படுத்தும் போக்கினை கை விடு.
4. காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும்.
5. GDS, தினக்கூலி, தற்காலிக மற்றும் கான்ட்ராக்ட் ஊழியர்களை நிரந்திரமாக்கிட வேண்டும்.
6. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 01.01.2011 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றம் (Pay commission) வழங்க வேண்டும்.
7. இரயில்வே துறையைப்போல மற்ற மத்திய அரசு துறைகளிலும் கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பிற்கான உச்ச வரம்பு நீக்கவேண்டும்.
8. உற்பத்தியுடன்(PLB )இணைந்த போனஸ் வழங்கு.
9. MACP பிரச்சினை உள்ளிட்ட,அனாமலி கமிட்டியில்நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் 2 மாதகால அவகாசத்திற்குள் முடிக்க வேண்டும்.
10. வேலைநிறுத்த உரிமையை தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாக்கிட வேண்டும்.
11. நடுவர் மன்ற தீர்ப்புகள் அனைத்தையும் அமல படுத்து.
12. GPF INTEREST, OTA , NIGHT HALT ALLOWANCE சீருடை தையல்கூலி ஆகிய வற்றை உயர்திடவேண்டும்.
13. 50% DA ஊதியத்துடன் இணைக்கபட வேண்டும். அதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
14. தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட வேண்டும்.
15. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரம்பு எதுமின்றி சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
16. ஒருமுகப்படுத்தாத தொழிலாளர்களீன் ஆணையம் மற்றும் parilimentray committee பரிந்துரைகளீன்படி போதுமான் நிதிஆதரங்களுடன் கூடிய தேசிய பாதுகாப்புநிதி உருவாக்கபடவேண்டும்.
17. தொழிற்சாலைகள்/நிறுவனங்கள் நிரந்தரமான தொடர்சியானதன்மை கொண்டபணிகளை ஒப்பந்தமயமாக்க கூடாது.
18. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் மாதம் ரூ.10000/- என உறுதி செய்யபடவேண்டும்.
19. போனஸ் பெறுவதற்கு / GPF பெறுவதற்கு உள்ள உச்சவரம்பு நீக்க வேண்டும்.
20. New pension schemes (PFRDA) ரத்து செய்ய பட வேண்டும்..
21. தொழிற்சங்கங்களுகான பதிவு 45 நாட்களுக்குள் என்பது பதிவுசெயப்படவேண்டும்.


வேலைநிறுத்த விளக்க கூட்டம்


நடைபெறு விருக்கின்ற 28-2-12 நாடு தழுவிய வேலைநிறுத்த விளக்க கூட்டம் அஞ்சல் மூன்று மண்டல செயலர் தோழர். நாராயணன் அவர்கள் 27-2-2012 அன்று மானாமதுரையில் விளக்க உரையாற்ற உள்ளார்கள். நமது GDS மண்டலசெயலர் தோழர் செல்வன் அவர்கள் அனைத்து பகுதி கூட்டத்திலும் விளக்க உரையாற்ற உள்ளார்கள்




DATE PLACE OFFICE
24-2-2012 THIRUPPATHUR TRR BUS STAND, SM OSPITAL, EIYUR
05.00மணி KANDARAMAICKAM, K YT

THIRUKOSTIYUR AND ALL BOS
25-2-2012 KALAYARKOIL KALLAL, MANAGALAM, SARAKANEI
௦ 05.00 மணி NATARAJAPURAM,VETHIYUR,
TIRUVEGAMPET AND ALL BOS




27-2-2012 MANAMADURAI.HO MANAMADURAI TOWN,
05.00 மணி MANAMADURAI.R.S, KANNAR STREET,
TIRUPPUVANAM, IDAIKATTUR,
PERIYAKOTTAI , ILAYANGUDI, SALAIGRAMAM


எனவே நமது கோட்டத்தில் வழக்கம்போல 100% வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்று நமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


தோமையுடன்

S.செல்வன் G.மீனாட்சிசுந்தரம் M.கருப்புச்சாமி
(GDS மாநில உதவி மண்டல (P4,செயலாளர் ) (P3 செயலாளர்)

கருத்துகள் இல்லை: