ஜனவரி 22, 2009

ஈடி சங்கத்தின் அகில இந்திய வேலை நிறுத்தம் - ஒர் அலசல்.

அன்பிற்கினிய தோழர்களே

ஈடி சங்கத்தின் அகில இந்திய வேலை நிறுத்தம் - ஒர் அலசல்
.
ஈடி சங்கத்தின் அகில இந்திய செயலர் தோழர் மஹாதேவ்வையா அறைகூவல் விடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுமைக்கும் ஏறத்தாழ 80 சதவிகிதத்திற்கு மேற்ப்பட்ட GDS ஊழியர்கள் பங்கேற்றனர்.17.12.2008 முதல் 19.12.2008 வரை நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் வரலாற்று சிறப்பு மிக்கது.ED சங்கமே GDS ஊழியகளுக்காக நடத்திய முதல் போராட்டம் .இதற்கு முன்பு 19.09.1984 ல் தான் ஈடி ஊழியரின் பிரச்சனைகளுக்காக P4 (அஞ்சல் நான்கு) சங்கத்தின் பொதுச்செயலர் தோழர்
ஆதிநாராயணா அறைகூவல்படி வேலைநிறுத்தம்னடைபெற்றது.
ஈடி ஊழியருக்காக தனியாக காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம்;ம்த்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனமும், NFPE சம்மேளனமும் இணைந்து நடத்தவுள்ள 06.01.2009 முதல் நடைபெறவுள்ள காலவறையற்ற வேலைநிறுத்தத்தில் (சரியான தயாரிப்பு இல்லை என்று சொல்லி 06.01.2009 லிருந்து 20.01.2009 க்கு தள்ளி வைக்கப்பட்டு பின்னர் அதே காரணத்தை சொல்லி தேதி குறிப்பிடப்படாமல் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.) ஈடி கோரிக்கைகளையும் உள்ளடக்கி அதில் ஈடிச்சங்கம் கலந்து கொள்ள வேண்டும் என ஈடி சங்கத்தின் அகில இந்திய செயலர் தோழர் மஹாதேவ்வையாவை NFPE சம்மேளனம் கேட்டது.GDS ஊழியர்களின் கொதிநிலை உணர்வினை சரியாகப் புரிந்துகொண்ட தோழர் மஹாதேவ்வையா 17.12.2008 முதலே காலவறையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதில் உறுதியாக இருந்தார். NFPE தலைமை முதல் இரு தினங்களுக்கு மட்டுமே ஆதரவுக்கரம் நீட்டியது. கடைசி நாளில் வலுவற்ற காரணம் சொல்லி ஆதரவை விலக்கிக்கொண்டது . ஆனாலும் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது. NFPE சம்மேளனத்தலைமையின் வேண்டுகோளை ஏற்று காலவறையற்ற வேலைநிறுத்தத்தை தள்ளி வைத்திருந்தால் வேலைநிறுத்தம் என்பதே நடந்திருக்காது. GDS ஊழியகளுக்கு துரோகம் இழைத்தவர் என்ற அவச்சொல்லுக்கும் ஆளாகி இருப்பார்.GDS ஊழியர்களின் உணர்விலே கலந்து உயிரிலே நுழைந்து அவர்களின் வரலாற்று நாயகனாய், நம்பிக்கை ஒளி விளக்காய் திகழ்கிறார்.NFPE unions of Sivaganga Division salute you comrade Mahadevaiah. WE WISH YOU MORE SUCCESS.

கருத்துகள் இல்லை: