ஆகஸ்ட் 26, 2025

Financial upgradation - August 26 2025

அனைவருக்கும் மாலை வணக்கம்

நமது அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பெரும் முயற்சியின் மூலமாக கிடைக்கப்பெற்ற (12 24 36) 3 கட்ட பதவி உயர்வு தகுதி உடைய நமது மூத்த தோழர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

அதில் சில மூத்த தோழர்களுக்கு பணி இடைநிறுத்தத்தின் காரணமாக பெறுவதில் தாமதம் ஏற்பட்டது

அதனை நமது தொழிற்சங்கம் மாதாந்திர சந்திப்பில் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் விரைந்து வழங்குமாறு வலியுறுத்தி வந்தோம்

தற்போது அது நமது மூத்த தோழர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி🙏

ஆகஸ்ட் 20, 2025

ஆர்ப்பாட்டம் -20.08.2025

ஆர்ப்பாட்டம்💪 

ஆர்ப்பாட்டம்💪

8 வது ஊதிய குழுவை உடனடியாக அமைத்திட வலியுறுத்தி நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம்💪💪💪

மத்திய மாநில சங்கங்களின் (PJCA) அறைகூவலுக்கு இணங்க நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம்💪💪💪

இன்று (20.08.25) சிவகங்கை தலைமை அஞ்சலகம் முன்பாக மாலை 5.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது

எனவே மூன்று சங்கங்களின் தோழமைகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

போராடுவோம்
வெற்றி பெறுவோம்
இறுதி வெற்றி நமதே

P. மாதவன்
செயலர் P3

P. நடராஜன்
செயலர் - P4

A. ரெத்தின பாண்டியன்,
செயலர் AlGDSU
சிவகங்கை DN

...ப.சேர்முக பாண்டியன்- August 20.08.2025

*புதியன விரும்பு*

*புதியன விரும்பு* என்பது மகாகவி பாரதியின் வாக்கு .

புதுபுதிதாய் வருகின்ற தொழிற் நுட்பங்களோடு பயணித்து அவற்றை நம் இயக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதில் சிவகங்கை உருவானது எப்போதும் முன்னணியில் இருந்தே வந்துள்ளது.

  இணைய தளங்கள் Blogspot என்ற பெயரில் வந்த ஆரம்ப காலத்திலேயே *NFPE Sivaganga யின் இணையத்தளம் https://nfpesivaganga.blogspot.com/* 
உருவானது.
அதற்கு தோழர் கே. மதிவாணன் துணை புரிந்தார். தமிழகத்தில் அஞ்சல் அரங்கில் முதன் முதலாக தமிழில் வந்த இது தான் .

ட்விட்டர் என்ற பெயரில் Microblog வந்த போதும் அதையும் பயன்படுத்தியது நமது இயக்கம்.

WhatsApp இப்போது பல சங்கங்களின் இணையத்தளங்களை காணாமல் ஆக்கி விட்டது. நம் தளமும் சில ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படவில்லை.

 *இணையத் தளம் நிலையானது. அதிலிருந்து நாம் பதிந்தவற்றை எங்கும் எப்போதும் பார்த்துக் கொள்ளலாம். அதை தொகுத்தாலே மாநாட்டு அறிக்கையை தயார் செய்திடலாம்.* Rulings செக் பண்ணிக்கொள்ளலாம். 

 *ஆனால் Whatsapp இல் பதிந்தவை மொத்தமாய் காணாமல் போய்விடும்.* 
எழுதியவை அனைத்தும் நீரில் எழுதிய எழுத்துக்களாக ஆகிவிடும்.


எனவே மீண்டும் *நமது சங்கத்தின் இணையத் தளத்தை தொடர்ந்து தினசரி அப்டேட் செய்து அதன் லிங்க்கை உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும்* . நம் இணையதளத்தை தினசரி பார்க்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டுமெனில் அதில் சங்கங்களின் மத்திய மாநில கோட்டச் குறித்த செய்திகள் தினமும் வரவேண்டும். அத்தோடு தொழிலாளர்களின் வர்க்க நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் அரசியல் கொள்கைகளை ஊழியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 

 *சங்கச் செயல்பாடுகளை இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நவீனப் படுத்துங்கள்.* கூகுள் மீட், ஜூம் மீட் மூலம் எல்லோருடனும் connect ஆக இருக்க வேண்டியது அவசியம். அந்த இணைப்பை பயன்படுத்தி நேரில் சந்தித்து பேச பகுதிக் கூட்டங்கள் நடத்துங்கள். இல்லையெனில் தொழில் நுட்பங்களை வாழ்வின் ஒரு பகுதியாக்கி கொண்ட இன்றைய புதிய தலைமுறை ஊழியர்களிடமிருந்து சங்கங்கள் விலகிப் போய்விடும். *சங்கங்களை நவீனப் படுத்துவதன் மூலமே அவர்களிடம் சங்கத்தலைமை கனெக்ட் ஆக முடியும்.* அதுவே அடுத்த கட்டத்துக்கு சங்கங்களை இட்டுச் செல்லும். இல்லையெனில் பின் தங்கி விடுவோம். 

மூத்த தோழர்கள் இதை உள்வாங்கிக் கொண்டு சங்கத்தை நவீனமயப் படுத்துவதில் புதிதாய் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய தலைமுறை தோழர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதும் என் வேண்டுகோளாகும்.

 *Kudos to the new generation leadership for taking forward the Associations to the next level.* 


...ப.சேர்முக பாண்டியன்

ஆகஸ்ட் 18, 2025

14 th AIGDSU CONFERENCE SIVAGANGA division - 630561

14 வது AIGDSU சிவகங்கை கோட்டம். 
1. Pictures 
2. Videos 


Pictures : https://drive.google.com/drive/folders/15nGuZ8ezO2E-DDrUYbykKgpX2TqpoZxe

_________________________________

Part - A 
Youtube : AIGDSU sivaganga

1. வரவேற்புரை - 14 வது AIGDSU கோட்ட மாநாடு , சிவகங்கை

https://youtu.be/-BT3zvAyzUM

2. AIGDSU கொடியேற்றம் - பகுதி 2---  AIGDSU கோட்ட மாநாடு , சிவகங்கை
https://youtu.be/JBbtcE-VQY0

3. கொடியேற்றம் பின்பு - பகுதி 3 ---- 14 வது AIGDSU கோட்ட மாநாடு , சிவகங்கை

https://youtu.be/qeLT784z9Ok

4. வரவேற்புரை தோழர்.நாகராஜன் , உதவி கோட்ட செயலர், - பகுதி 4 ---- 14 வது AIGDSU கோட்ட மாநாடு , சிவகங்கை

https://youtu.be/mFKVXhbkFPI

5. தோழர். க.செல்வராஜ் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்அமைப்பு செயலாளர்,முன்னாள்NFPEP3 செயலர் பகுதி -5

https://youtu.be/CboE479gMPs

6. இராண்டு அறிக்கை - செயலர் செல்வன் -- 14வது கோட்ட மாநாடு

https://youtu.be/LZ9Yt5fpUmw

7. தோழர். N. ராமசாமி, மாநில தலைவர் ,AIGDSU , விருதுநகர்

https://youtu.be/Z-7w_nX24K8

8. மாநில செயலர்  AIGDSU தோழர். V.G.சாந்தமூர்த்தி , கிருஷ்ணகிரி

https://youtu.be/NGxZWDjYIqA

9. தோழர். சேர்முக பாண்டியன் , ex. NFPE P3 செயலர் 

https://youtu.be/Jwynq2V9WBM

10. தோழர்.சேகர் , Aigdsu செயலர் இராமநாதபுரம் கோட்டம்

https://youtu.be/5Aeve6wGdMo
___________________________________
Part - B  
Youtube channel : NFPE Sivaganga 

1. தோழர்.S.S.MURUGAN, AIGDSU secretary,Karaikudi Division

https://youtu.be/qG8rHx29tng

1. A கோரிக்கை - தோழர்.S.s murugan sec.Aigdsu Karaikudi

https://youtu.be/8fkZyScjVu4

2. தோழர்.மாதவன் , NFPE P3 SIVAGANGA division

https://youtu.be/2DEVmVRmpwY

3. முக்கிய கோரிக்கை - மாநில செயலர் , AIGDSU 

https://youtu.be/gBkWtEHwzvc

4. தோழர். கருப்பையா, AIGDSU செயலர் , Dindigul 

https://youtu.be/ZALu8ekF7WQ

5. தோழர். நடராஜன் , NFPE P4 செயலர், சிவகங்கை

https://youtu.be/EosgtG0aS-w

6. தோழர். பிச்சைய்யா, AIGDSU செயலர் கோவில்பட்டி கோட்டம் 

https://youtu.be/brnnYs2697o

7. தோழர்.V.Malairaj, ஆசிரியர்,ex NFPE P3 செயலர் 

https://youtu.be/3y6FVZR0vvg

8. தோழர். வீரைய்யா ,செயலர் AIGDSU புதுக்கோட்டை கோட்டம்

https://youtu.be/lnpwc5VSErU

9. தோழர். பாஸ்கரன் , Ex CIRCLE SECRETARY , Secretary Aigdsu Madurai Division 

https://youtu.be/oqWhmKybxHs

_____________________________________
Part - C  
Youtube channel : PJCA Tamilnadu
1. தோழியர்.மாலதி, SPM, SIVAGANGA COLLECTORATE

https://youtu.be/pbIC5ZqIL6s

2. தோழர்.R.பார்த்தசாரதி, Ex NFPE P4 செயலர் 

https://youtu.be/iRVu-wDTZ48

3. தோழர்.G.நாகலிங்கம் , உதவி செயலர் , NFPE P3 சிவகங்கை

https://youtu.be/nBufqMRQ8tQ

4. தோழர். s.திருக்குமார் , NFPE P3 பொருளாளர் 
https://youtu.be/j833gUqB8Hc

5. நிர்வாகிகள் தேர்வு - 14 வது சிவகங்கை AIGDSU கோட்டம்

https://youtu.be/hFlCU5aEw2A

6. மகிளா கமிட்டி தேர்ந்து எடுக்கபட்டவர்கள்
https://youtu.be/Wna47_vg3sM

7. தோழர். S. ராஜேந்திரன்,ex NFPE P3 செயலர் 
https://youtu.be/ISW0ZNeqGPQ

8. இறுதி நிகழ்வுகள் -  14 வது AIGDSU சிவகங்கை கோட்டம்

https://youtu.be/IYJoNlBp2QI

ஆகஸ்ட் 13, 2025

அஞ்சல் நிர்வாகத்தின் தான் தோன்றித் தன போக்கினை கண்டித்து - ஆர்ப்பாட்டம்:இடம்: சிவகங்கை Ho முன்பாகநாள்: இன்று 13-08-2025- புதன்நேரம் : மாலை 5:30 மணியளவில்அன்பார்ந்த தோழமைகளுக்கு வணக்கம்...தமிழ் மாநில சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு (PJCA) அறிவிப்பிற்கிணங்க (AlGDSU/NFPE - P3/NFPE - P4) அஞ்சல் நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது. அனைத்து தரப்பு ஊழியர்களும் மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றோம்.எனவே பாதிப்பின் வலியினை உணர்ந்து அனைவரும் ஆர்ப்பாட்ட நிகழ்வினில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.முக்கிய கோரிக்கைகள் சில.... :> நெட் ஒர்க் பிரச்சனைகளை சரி செய்திட வேண்டும்.> வேலை நேரத்தை தாண்டி பணி செய்ய பணிப்பதை நிறுத்திட வேண்டும்.> டெலிவரி செய்து வரும் ஊழியர்களை, குறித்த நேரத்தில் பட்டுவாடாவிற்கு அனுப்ப வேண்டும்.> நெட்ஒர்க் பிரச்சனை சரியாகும் வரையில், மேளா, லாகின் டேயை நிறுத்தி வைத்திட வேண்டும்.> ஊழியர்களுக்கு டார்கெட், கொடுத்து டார்ச்சர் பண்ணுவதை நிறுத்திட வேண்டும்.> அஞ்சல் சட்ட விதி 2023 ஐ திரும்பப் பெற வேண்டும்.> தனியார்மயப்படுத்தும் கொள்கையினை நிறுத்திட வேண்டும்.> IDC - போன்ற அஞ்சல் வணிக வளாகமாகும் மோசமான போக்கினை நிறுத்திட வேண்டும்...போராட்ட வாழ்த்துக்களுடன் P.நடராஜன்செயலர் P4P. மாதவன்செயலர் P3A ரெத்தின பாண்டியன்.செயலர் AIG DSUசிவகங்கை .

ஜூலை 16, 2025

நமது மூத்த தோழர் ஆறுமுகம் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகிறார்கள்


நமது மூத்த தோழர் ஆறுமுகம் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகிறார்கள்

 தொழிற்சங்கத்தின் மீது மிகவும் தீவிர பற்று கொண்டவர் அனைத்து தொழிற்சங்க நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்பவர் 

தோழர் அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்

அவர்களுடன் முத்துப்பட்டியில் பணிபுரிந்த பொழுது எண்ணற்ற விஷயங்களை கற்றுத் தந்துள்ளார்

தோழர் அவர்கள் தொழிற்சங்க வழிகாட்டியாகவும் தொழிற்சங்க புத்தகமாகவும் இறுதிவரை தனது பணியை நிறைவு செய்துள்ளார் 

மனம் நிறைந்த பணி ஓய்வு வாழ்த்துக்கள்💐