மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பணிக்கு வந்த புதிதில் சிவகங்கை கலெக்டரேட் SO-வில் மூன்று சங்க நிர்வாகிகள் மூத்த தோழர்கள் முன்னிலையில் தொழிற்சங்க பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அன்று எழுந்து பேசி என்னை நான் தொழிற்சங்கத்திற்கு அறிமுகப்படுத்தி கொண்டேன்.
இன்று அதே கலெக்டரேட் SO-வில் AIGDSU-வின் கோட்ட செயலாளராக என்னை தேர்வு செய்தமைக்கு நன்றிகள். இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி நமது தோழர்களுடன் இணைந்து தொழிற்சங்க பணிகளில் தொய்வில்லாமல் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
தொழிற்சங்கம் சிறப்பாக செயல்பட தோழர்கள் அனைவரின் கருத்துகளும் எண்ணங்களும் வெளி வருவது அவசியம். நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க நாங்கள் இருக்கிறோம்.
9786371013
7904174541
எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள் பேச தயாராக இருக்கிறேன்.
கா. தமிழ்வாணன்,
கோட்டச் செயலர்,
AIGDSU
சிவகங்கை கோட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக