ஆகஸ்ட் 13, 2025

அஞ்சல் நிர்வாகத்தின் தான் தோன்றித் தன போக்கினை கண்டித்து - ஆர்ப்பாட்டம்:இடம்: சிவகங்கை Ho முன்பாகநாள்: இன்று 13-08-2025- புதன்நேரம் : மாலை 5:30 மணியளவில்அன்பார்ந்த தோழமைகளுக்கு வணக்கம்...தமிழ் மாநில சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு (PJCA) அறிவிப்பிற்கிணங்க (AlGDSU/NFPE - P3/NFPE - P4) அஞ்சல் நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது. அனைத்து தரப்பு ஊழியர்களும் மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றோம்.எனவே பாதிப்பின் வலியினை உணர்ந்து அனைவரும் ஆர்ப்பாட்ட நிகழ்வினில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.முக்கிய கோரிக்கைகள் சில.... :> நெட் ஒர்க் பிரச்சனைகளை சரி செய்திட வேண்டும்.> வேலை நேரத்தை தாண்டி பணி செய்ய பணிப்பதை நிறுத்திட வேண்டும்.> டெலிவரி செய்து வரும் ஊழியர்களை, குறித்த நேரத்தில் பட்டுவாடாவிற்கு அனுப்ப வேண்டும்.> நெட்ஒர்க் பிரச்சனை சரியாகும் வரையில், மேளா, லாகின் டேயை நிறுத்தி வைத்திட வேண்டும்.> ஊழியர்களுக்கு டார்கெட், கொடுத்து டார்ச்சர் பண்ணுவதை நிறுத்திட வேண்டும்.> அஞ்சல் சட்ட விதி 2023 ஐ திரும்பப் பெற வேண்டும்.> தனியார்மயப்படுத்தும் கொள்கையினை நிறுத்திட வேண்டும்.> IDC - போன்ற அஞ்சல் வணிக வளாகமாகும் மோசமான போக்கினை நிறுத்திட வேண்டும்...போராட்ட வாழ்த்துக்களுடன் P.நடராஜன்செயலர் P4P. மாதவன்செயலர் P3A ரெத்தின பாண்டியன்.செயலர் AIG DSUசிவகங்கை .

கருத்துகள் இல்லை: