ஜனவரி 31, 2019

அஞ்சல் மூன்று சங்க மாநில செயலர் தோழர் ஜே ராமமூர்த்திக்கு இன்று பணி நிறைவு நாள் (31.01.2019)

அஞ்சல் மூன்று சங்க மாநில செயலர் தோழர் ஜே ராமமூர்த்திக்கு  இன்று பணி நிறைவு நாள் (31.01.2019)


இன்று பணி நிறைவு செய்யும்  தோழர் ஜே. ராமமூர்த்தி என் இனிய நண்பர் . நான் டில்லியில் பணி செய்த போது  அங்கு வரும் ஜேயாரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்தித்துப் பேசுவேன். எங்களது நீண்ட உரையாடல் தொலைபேசியில்  அவ்வப்போது தொடரும். அவரோடு நான் பேசும் ஒவ்வொரு முறையும் அதே வாஞ்சையும் , நட்பும் பேச்சில் இருக்கும். மனம் விட்டுப் பேசுவார்.  ஆனால்  சங்க  செயல்பாட்டில் வரும்  கஷ்டங்கள் குறித்த புலம்பல் இருந்ததில்லை . அவரது
தொழிற்சங்க பணிக்கு வந்த இடையூறுகளை எல்லாம்  இலாகவமாக கடந்து செல்லும் மனப் பக்குவம் கொண்டிருந்தார் .மாநில செயலராக அவர்  பணியாற்றும் போது ஏற்பட்ட  எவ்வளவோ நெருக்கடிகளையும்  புறந்தள்ளி மாநில சங்கத்தை சிறப்பாக நடத்தினார்.

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் எழுத்தராக நுழைந்தவர் ஜேயார். அங்கு தான் அவர் தன் தொழிற்சங்க பணியை துவக்கினார்.
தனது சீரிய திறமையால்,உழைப்பால்,  ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதில்  காட்டிவந்த   தீவிர அக்கறையால்,  தமிழக தொழிற்சங்க அரங்கில்  அஞ்சல் மூன்று சங்கத்தின்  மாநில செயலாளராகவும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவராகவும் ,  இந்திய அளவில் உயர்ந்து அஞ்சல் மூன்று  சங்கத்தின் அகில இந்திய தலைவராகவும் திறம்பட சங்கப் பணியாற்றி வருகிறார்.

அணி வித்தியாசம் பாராமல் சங்கப் பொறுப்பாளர்கள்  அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு பாராட்டும் நல்ல இதயம் கொண்டவர்.

 ஊழியர்களின் பொதுப் பிரச்சினையில் அளப்பரிய அக்கறைகாட்டி செயல்பட்டு வந்தார்.

Finnacle, CSI ROLLOUT ன் போது அடிப்படை கட்டமைப்புகள் வசதி செய்யாமல் அவற்றை அமலாக்கம் செய்யக் கூடாது என உறுதியான நிலை எடுத்து செயல் பட்டார்.

PA Recruitment ல் உள்ள குறைகளை சரிவர சுட்டிக்காட்டி  மாநில நிர்வாகம் காட்டிவந்த மெத்தனப் போக்கை களைந்து புதிய ஊழியர்கள் நிறையப்பேர் நமது இலாகாவுக்குள் உள்ளே வர சாளரம் திறந்துவிட்டவர்.

ஒவ்வொரு தடவையும் Recruitment process க்கு முன்னால் RULE38 மாறுதல்கள் போடவேண்டும் என நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி அதை இப்போது நடை முறையாக்கியவர்.

குடும்ப நலன்களை புறந்தள்ளி விட்டு இயக்கப் பணிக்காக சென்னையில் தனியே வாழ்ந்து முழு நேரத்தையும் சங்கத்துக்காக அர்ப்பணித்து செயல் பட்டு வந்தார். அவரது  செயல் பாடுகள் வருகின்ற புதிய செயலர்களுக்கு வழிகாட்டியாக அமைந்திடும் .

 J R என்ற ஈரெழுத்துச் சொல் நமது இயக்க வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

நோய் நொடியின்று பல்லாண்டு வாழ, நமது தொழிற்சங்க இயக்கத்திற்கு  துறுதுறுவெனஅதே சுறுசுறுப்புடன்   தொடர்ந்து வழிகாட்ட என மனமார்ந்த வாழ்த்துக்கள்.

P.சேர்முக பாண்டியன்
முதுநிலை கணக்கு அதிகாரி (ஓய்வு) &
முன்னாள் கோட்டச் செயலர்,NFPE-P3

கருத்துகள் இல்லை: