ஜனவரி 01, 2016

அகில இந்திய அஞ்சல்  ஊழியர்கள் சங்கம்
(அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு)


அகில இந்திய புறநிலை ஊழியர்கள் சங்கம்
சிவகங்கை கோட்டம், சிவகங்கை 630561
www.nfpesivaganga.blogspot.in
_______________________________________________________________________
                                                                                                                        1.1.2016
அன்பிற்கினிய தோழர்களே, தோழியர்களே,
இனிய புத்தாண்டு 2016 மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

            பல சவால்களும், சாதனைகளும் நிறைந்த 2015-ஆம் ஆண்டு நிறைவுற்று 2016-தொடங்குகிறது!
              கடந்த ஆண்டில் நமது அஞ்சல் துறையில் CBS, DOP WAN(SIFY NETWORK)  மற்றும் SSA கணக்குகளை அதிகஅளவில் துவக்குதல் என மற்ற முன்னேறிய துறைகளைப்போல்   நாமும் இரவு பகல் பாராத நமது கடுமையான உழைப்பினால் நமது அஞ்சல் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறோம்! 

              எதிர்வரும் 2016-ஆம் ஆண்டில் CORE INTEGRATED SOLUTIONS (சேமிப்பு வங்கி, ஆயுள் காப்பீடு தவிர்த்து நமது மற்ற சேவைகளை ஒருங்ககிணத்து ONLINE சேவை வழங்குதல்), கிராம அஞ்சல் சேவைகளை கணினிமயமாக்குதல் (RURAL ICT) போன்ற சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.  அதனையும் நமது கடுமையான உழைப்பினால் நிறைவேற்றி சாதிப்போம்!

              அதே நேரத்தில், அந்த உழைப்பிர்கேற்ற பலனை, ஊதியத்தை தொழிலாளர்களாகிய நாம் எதிபார்ப்பதில் தவறில்லை.  நமது நியாயமான உரிமைகளுக்காக நாம் ஒன்று பட்டு போராடி கோரிக்கைகளை வென்றெடுப்போம்.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அதுவம் அலுவல் நாட்களில் பாதிநாட்கள் கூட அவையில் இல்லாதவர்களுக்கும் சேர்த்து  எவ்வித கமிட்டியும் இல்லாமல் இரண்டு மடங்கு ஊதியத்தை உடனடியாக உயர்த்த முடிவுசெய்யும் மத்திய அரசு, நமது அஞ்சல் ஊழியர்களின்  அதுவும் நம் புற நிலை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறது! 

             ஆண்டு முழுவதும்  விமான போக்குவரத்து சலுகை, ரயில் போக்குவரத்து சலுகை, தொலைபேசி சலுகை,  மின்சார கட்டண சலுகை, நாடாளுமன்ற கேண்டினில் மலிவு விலையில் உணவு சலுகை என இந்த சலுகைகளை எல்லாம் விட்டுத்தர சொல்லாத பிரதமர் மோடி சாமானிய மக்களை காஸ் மானியத்தை விட்டுத்தர சொல்லுவது வேடிக்கை!
             
              7 வது ஊதியக்குழுவின் பாதகமான பரிந்துரைகளை முறியடித்தல், புறநிலை ஊழியர்களின் சம்பள கமிட்டி நியாமான பரிந்துரைகளை வழங்குதல் போன்றவை நாம் எதிகொள்ள வேண்டிய தலையாய பிரைச்சனைகள்.  அவற்றை எதிவரும் 2016-ஆம் ஆண்டில் வென்றெடுப்போம் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு  2016-இல் அடியெடுத்து வைப்போம்!
எங்கோ தனித்தனியாக பிறந்தவர்கள்,
வெவ்வேறு மாவட்டங்கள், வெவ்வேறு மதங்கள்
வெவ்வேறு  மொழிகள்,  கடவுள் நம்பிக்கை கொண்டோர், அல்லாதவர், ஆண், பெண் என பல அடையாளங்களோடு இருக்கும் சராசரி மனிதர்களை தொழிலாளி என்கிற ஒற்றை அடையாளத்தோடு பிணைப்பதில் பிரதானமானது  தொழிற்சங்கம் ஒன்றுதான்.

நம்மால் சோதனைகளை வெல்லவும்  சாதனைககளை படைக்கவும் முடியும்!
இந்த நற்சிந்தனையையும், மன வலிமையையும்  
நமது முன்னோர்கள் உருவாக்கிய  பாரம்பரியம்மிக்க இந்த  சிவகங்கை NFPE தொழிற்சங்கம் நமக்கு வழங்கி இருக்கிறது!
தோழைமையுடன்

தோழர் M.குருநாதன்  தோழர் U.சந்திரன்  தோழர் G.நாகலிங்கம்

 (செயலர் AIGDSU)       (செயலர் AIPEU-P4)     (செயலர் AIPEU-P3)

கருத்துகள் இல்லை: