டிசம்பர் 04, 2015

சிவகங்கை நகராட்சி தலைவருக்கு கடிதம்

                சிவகங்கை தலைமை அஞ்சலகம் கட்டிடம் கட்ட நடவடிக்கை கோரி   கடந்த வருடங்களில்  முன்னால் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களுக்கு நமது சட்ட மன்ற தொகுதி MLA தோழர் S.குணசேகரன் அவர்கள் மூலம் மனு கொடுக்கப்பட்டது.  கட்டிடத்திற்கான இடம் வழங்க வேண்டி மாவட்ட ஆட்சி தலைவருக்கும் நமது தொழிற்சங்கம் மூலம் மனு அளிக்கப்படிருந்தது.   அதன் தொடர்ச்சியாக கட்டிடம் நிதி வழங்க நமது இலாக்க முன்வந்த பொழுதும், இடம் இல்லாததால் அந்த நிதி திருப்படும் சூழல் உள்ளது.




                இது சம்பந்தமாக நகராட்சி மூலம் இடம் அளிக்க வேண்டி 3.12.2015 அன்று சிவகங்கை  நகராட்சி தலைவரை நமது சங்கத்தின் சார்பில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.   நகராட்சி தலைவரும் விரைவில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

                   அந்த கடித விவரம்



NFPE                                 N F P E                                   NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION
(GROUP ‘C’ EMPLOYEES)
SIVAGANGA DIVISION,
Sivaganga  – 630561.
                                                   www.nfpesivaganga.blogspot.in

G. NAGALINGAM                                                                                                       M.KARUPPUCHAMY                     
Divisional Secretary                                                                                           Divisional President                                           
Cell No. 94439 76740                                                                                               Cell No. 94860 72824 ______________________________________________________________________________            

பெறுனர்:
மதிப்பிற்குரிய நகராட்சி தலைவர் அவர்கள்
சிவகங்கை நகராட்சி,
சிவகங்கை -630561.

மதிப்பிற்குரிய நகராட்சி தலைவர் அவர்களுக்கு,
வணக்கம்,

              சிவகங்கைக்கு தலைமை அஞ்சலகமாக மானாமதுரையில் செயல்பட்டு வந்த நிலையில் 1.10.2008 முதல் வாரசந்தை சாலையில் வாடகை கட்டிடத்தில் சிவகங்கை தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகமும் கோகலே ஹால் தெருவில் வாடகை கட்டிடத்தில் செயல் பட்டு வருகிறது.   மற்ற நகரங்களில் உள்ள தலைமை அஞ்சலகங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. உதாரணமாக காரைக்குடி, தேவகோட்டை, மானமதுரை, திருப்பத்தூர், மதுரை.
            இந்த இரண்டு அலுவலகங்களிலும் சிவகங்கை நகர்,  மற்றும்  அதன் அருகில் உள்ள கிராம பகுதி மக்களுக்காக  தபால் பட்டுவாடா சேவை, EB BILL,  ஆயுள் காப்பிடு, வங்கிசேவை, TNPSC EXAM FEE உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. வாடகை கட்டிடத்தில் இட நெருக்கடி காரணமாக ஊழியர்கள், பொதுமக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலையும் நிலவுகிறது.
                                                                                                                  


                               இந்த இரண்டு அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து சிவகங்கை நகரில் ஒரு கட்டிடம் கட்ட அஞ்சல்துறை இயக்குனர் அலுவலகம் பரிசீலனை செய்து அதற்கான நிதியை ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், சொந்த இடம் இல்லாத காரணத்தினால் மேற்கொண்டு நிதியை வேறு மாவட்டத்திற்கு திருப்பப்படும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

                                எனவே சிவகங்கை தலைமை அஞ்சலகம் சொந்தமான கட்டிடத்தில் செயல்பட அதற்கான கட்டிடம் கட்ட சிவகங்கை நகராட்சி பகுதியில் போதிய இடம் தங்கள் நகராட்சி மூலம் ஒதுக்கினால் அதில் அஞ்சல் இலாக்கா சொந்த கட்டிடம் கட்ட முன்வரும், இதனால்  சிவகங்கை நகர் மக்களுக்கு மேலும் சிறந்த முறையில் பணியாற்ற இயலும் என்பதால்  சிவகங்கை நகர் மக்கள் வந்து செல்ல வசதியான  இடத்தை தேர்வு செய்து தபால் இலாக்காவிற்கு வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். 

                                                                    தங்கள் உண்மையுள்ள,
சிவகங்கை
3.12.15      

                                                                                 /G.நாகலிங்கம்/

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

சிவகங்கைக்கு புதிய கட்டிடம் அமைய வாழ்த்துக்கள். இப்படிக்கு மணிகண்டன் ME.

பெயரில்லா சொன்னது…

super