மே 04, 2015

‘எனது அஞ்சல்தலை’ சேவையை இணையத்தில் பெறலாம்

எனது அஞ்சல்தலை’ சேவையை இணையத்தில் பெறலாம்
 May 2, 2015 08:51 ISTUpdated: May 2, 2015 08:51 IST
 ‘எனது அஞ்சல்தலை’ சேவையை இணையதளத்தின் மூலம் பெறலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் அதிகாரி மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய அஞ்சல் துறை சார்பில் அவரவர் உருவம் பொறித்த அஞ்சல் அட்டைகளை பெறும் விதமாக ‘எனது அஞ்சல்தலை’ (My Stamp) என்னும் சேவையை செயல்படுத்தி வருகிறது. இந்த சேவையை பெறுவதற்கு பொதுமக்கள், முக்கிய அஞ்சல் நிலை யங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் வச திக்காக ‘எனது அஞ்சல் தலை’ சேவை தற்போது இணையதளத்தில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி www.chennaipost.gov.in என்னும் இணையதளத்துக்கு சென்று ‘எனது அஞ்சல்தலை’ சேவைக்கான விண்ணப்பத்தை பெற்று அதைப்பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதற்காக ரூ. 300 கட்டணத்தை இணையதளம் மூலமே பரிமாற்றம் செய்யலாம். இதையடுத்து விண்ணப்பித்தவர் வீட்டுக்கே அவரது உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல்தலைகள் அனுப்பி வைக்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை மேற்சொன்ன இணையதளத்தில் பெறலாம்.


கருத்துகள் இல்லை: