ஏப்ரல் 25, 2015

தபால் நிலையங்களில் ரூ.1,000 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது: மத்திய அரசு


தபால் நிலையங்களில் ரூ.1,000 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது: மத்திய அரசு
By dn, புது தில்லி
First Published : 25 April 2015 01:14 AM IST
புகைப்படங்கள்

தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1,000 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பதாக மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தபால் நிலையங்களில் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1000.61 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது. அதில், இந்திரா விகாஸ் பத்திரம் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட ரூ.894.59 கோடி, 5 ஆண்டு தேசிய சேமிப்பு சான்றுகள் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட ரூ.60 கோடி, நிரந்தர வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்பட்ட ரூ.24.20 கோடி ஆகியவையும் அடங்கும்.

முன்பு நடைமுறையில் இருந்த சிறிய அளவிலான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையை அதன் உச்சவரம்பு காலம் முடிவடைந்த பிறகும் முதலீட்டாளர்கள் திரும்பப் எடுக்காமல் உள்ளனர். இதுவே, தபால் நிலையங்களில் ரூ.1,000 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பதற்கு காரணம் என்று அந்த பதிலில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள மற்றொரு பதிலில், நாட்டில் 55,669 கிராமங்கள் இன்னும் செல்லிடப் பேசி சேவை பெறாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

நாட்டில் செல்லிடப் பேசி சேவை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், இன்னும் 56,000 கிராமங்களுக்கு அந்தச் சேவை கிடைக்கவில்லை. இன்னும் 5 ஆண்டுகளில் பகுதி வாரியாக அந்தக் கிராமங்களுக்கு செல்லிடப் பேசி சேவை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை: