பிப்ரவரி 10, 2014

             NFPE                                         NFPE                                                     NFPE    
அகிலஇந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள்
(P3,P4, )
சிவகங்கை கோட்டம்,சிவகங்கை-630561
சுற்றறிக்கை எண்: 10                                                                                  தேதி : 08.02.2014
FEBRUARY 12 & 13 இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

அன்புத்தோழர்களே! தோழியர்களே!
                                    வணக்கம்., கடந்த டிசம்பர் 12-12-2013 அன்று MINIMUM WAGE Rs. 15,000/-, PAY COMMISSION, DA MERGER, PRICE RISE உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்றத்தை நோக்கி சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மத்திய அரசு ஊழியர் மஹா சம்மேளனம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்வதென மத்திய அரசுக்கு நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் நமது NFPE  மற்றும் FNPO சம்மேளனமும் சேர்ந்து வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

                        அதன்விளைவாக நமது கோட்டத்தில் 06-2-2014 அன்று நடைபெற்ற பொதுகுழுக்கூட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் நமது கோட்டத்தில் வழக்கம் போல் அனைத்து இலாக்கா தோழர்களும், தோழியர்களும் வேலைநிறுத்தில் கலந்து கொண்டு நூறு சதவீதம் வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

15 அம்ச கோரிக்கைகள்:
 1. ஊழியர் தரப்பில், தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள SEVENTH PAY COMMISSION TERMS OF REFERNCEசை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
 2. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுதல் உறுதிசெய்யப்படவேண்டும்.       
 3. GDS/CASUAL LABOURERS ஊழியரை இலாக்கா ஊழியராக்கி, ஓய்வுதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பயன்களும் வழங்கப்படவேண்டும்.
 4. அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் ஐந்து கட்ட பதவி உயர்வு வழங்கப்படவேண்டும்.
 5. புதிய ஓய்வூதிய திட்ட மசோதா (PFRDA)  திரும்பப்பெறவேண்டும். அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட, உத்தரவாதமுள்ள ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்.
 6. அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் இறந்த வாரிசுகளுக்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி பணி நியமனம் வழங்கப்படவேண்டும்.
 7. அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு தேவைப்பட்டால் புதிய பணியிடங்களை உருவாக்கப்படவேண்டும்.
 8. அலுவலக தரம் குறைத்தல், அரசு பணிகளை தனியாருக்கு விடுவது, ஆட்குறைப்பு, தனியார்மயம் நிறுத்ததப்படவேண்டும்.
 9. PERFORMANCE RELATED PAY வழங்கும் திட்டம் கைவிடப்படவேண்டும். அனைத்து  ஊழியர்களுக்கும் உச்சவரம்பின்றி BONUS வழங்கப்படவேண்டும.
 10. OTA, NIGHT HALT ALLOWANCE, WASHING ALLOWANCE போன்றவை மாற்றப்படவேண்டும.
 11. ARBITRATION AWARDS அனைத்தும் அமல்படுத்தப்படவேண்டும்.
 12. தொழிற் சங்கங்களை பழி வாங்கும் போக்கினை கைவிடவேண்டும்.
 13. வேலை நிறுத்த உரிமைச் சட்டமமக்கப்படவேண்டும்.
 14. விலைவாசிவுயர்வை கட்டுப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை புதுப்பித்து அனைவருக்கும் பயன்பெறச் செய்யவேண்டும்.
 15. JCM செயல்பாடுகள் புதுப்பிக்கப்படவேண்டும்துறை சார்ந்த கவுன்சில்கூட்டம் கூட்டப்பட்டு முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டும்.


போராட்ட வாழத்துக்களுடன்,
                                                                                                                     
 U.சந்திரன்                                                                                                 M.கருப்புச்சாமி
(P4, செயலாளர்)                                                                                      (P3, செயலாளர்)கருத்துகள் இல்லை: