ஜனவரி 13, 2014

போராட்டத் தீ மதுரை மண்டலம் எங்கும் பரவுகிறது !!!! தொழிற்சங்கம் தோற்றதில்லை !!!!


அன்புத் தோழர்களே... தோழியர்களே...

                 தென் மண்டல நிர்வாகத்தின் அராஜகப் போக்கினைக் கண்டித்து,  தமிழ் மாநிலச் செயலர்கள் மற்றும் இணைப்புக் குழுவின் அறை கூவலுக்கிணங்க, தென் மண்டலத்தில் 10.01.14 அன்று, தொடர் முழக்கப் போராட்டத்தில் பெண் தோழியர்கள் உட்பட சுமார் 500, எழுச்சி மிகு தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு, தென் மண்டல நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பரித்த கோஷங்கள் விண்ணை முட்டின. திரள் கூட்டத்தினைக் கண்டு தென் மண்டலமே ஆடிப் போனது.

                காலை 0900 மணி முதல், காவல் துறை நண்பர்கள் மூலமாகவும், வாயில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே நுழைய விடாமல், போராட்டத்தை முறியடிக்க செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடு பொடியாகின.

               மீண்டும் ஒட்டு மொத்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. அந்த கோரிக்கைகள் தவிர்த்த மாதாந்திரப் பேட்டிக்கு, தென் மண்டலத்தால் அழைப்பு விடுக்கப்பட்டதால், மாதாந்திரப் பேட்டியினை நமது எழுச்சி மிகு மாநிலச் செயலர்கள் நிராகரித்து வெளியேறினர்.

                மீண்டும் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சு வார்த்தையில்,

1. பொங்கல் அன்று துரித தபால் பட்டுவாடா உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
2. தூத்துக்குடி தோழியர் துர்கா தேவியின் மாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3. மேலூர் தெற்கு, மதுரை துணை அஞ்சலகம் மூடப்பெறும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

            மற்ற பல ஆண்டுகளாக தேங்கிக் கிடைக்கும் பிரச்சினைகளும் தீராமல், திரும்பிச் செல்ல இயலாது என்று ஆர்ப்பரித்த எழுச்சி மிகு தோழர்களுக்கு, மீண்டும் 21.01.14 அன்று மறுகட்ட பேச்சு வார்த்தை, அஞ்சல் மாநில மற்றும் மண்டலச் செயலர்களால் நடைபெறும் அன்று கோரிக்கைகள் அனைத்தும் தீர்க்கப்படவில்லை என்றால் மாநிலம் தழுவிய உச்சகடட போராட்டத்திற்கான அறை கூவல் அன்றே விடுக்கப்படும், என்று மாநிலச் செயலர் உறுதி அளித்தார். 

            மாநிலத்தலைமையின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஒத்துழைப்பு நல்க வேண்டும், ஒற்றுமையோடு இணைந்து போராட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்கின்ற என் வேண்டுகோளுக்கும், மாநில செயலரின் வேண்டுகோளின் பேரிலும், தென் மண்டலத்தின் அராஜகப் போக்கிற்கு எதிரான போராட்டம், தற்காலிகமாக முடிவு பெற்றது.

தொடர் முழக்கப் போராட்டதிற்கான எழுச்சி மிகு காட்சிகள் இதோ.....









கருத்துகள் இல்லை: