ஏப்ரல் 30, 2013

மே தின வரலாறு

 அனைவருக்கும் புரட்சிகர மே தின  வாழ்த்துக்கள் .மே தின வரலாற்றை சுருக்கமாக  தந்துள்ளோம் .

மே தினம் நமக்கு சீதனம்:

மே தினம் தொழிலாளர் வர்க்கத்தின் தியாகத் திருவிழா நாள். “மே தினம்” உழைப்பவர் சீதனம்.
MAY DAY FLAG.A GIFT FOR
 THE WORKING CLASS
ஆம் உண்மைதான் தோழர்களே. மே தின தியாகிகள் தங்கள் இன்னுயிர் நீத்து நமக்கு தந்த சீதனம் தான் “எட்டு மணி நேரம் வேலை” என்பது.


18 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்குப்பின் தான் முதலாளித்துவம் முளை விடத்துவங்கியது. அதுவரை தனக்கு சௌகரியப்பட்ட நேரத்தில் இடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தொழிற்சாலைகளின் கூரைகளுக்கு கீழ் வேலை செய்ய ஆரம்பித்தான். அப்போதே அவனது அடிமைத்தனம் துவங்கியது. வேலை! வேலை! வேலை! நேரமில்லை; காலமில்லை; வரைமுறையற்ற சுரண்டல்.ஏன் என்ற கேள்வி கேட்பாடில்லை. 

முதலாளித்துவம் முதலாளிகளின் லாப வேட்டைக்கான சுரண்டல் என்பவற்றை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த இயந்திரங்களால்தானே நாம் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்ற ஆத்திரம் அவனுக்கு. அவற்றை காலால் எட்டி உதைத்தான். 
Eight hours for WORK
Eight hours for REST
Eight hours for WHAT WE WILL


“கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் 
எவை எனும் அறிவுமிலார்” என்ற நிலையில் இருந்தனர். 

உன் தலை எழுத்து; நேரம் சரியில்லை: 
“ஏன் இந்த அவல நிலை நமக்கு மட்டும்? என்று கோபாவேசமாக அவன் கொதித்தெழுந்து கேள்வி எழுப்பினால்  “உன் தலை எழுத்து! உனக்கு விதிக்கப்பட்ட விதி; நீ முற்பிறவியில் செய்த பாவம்!உனக்கு நேரம் சரியில்லை” என்று சொல்லி அவனுள் கனன்ற நெருப்பை அணைத்தனர். நான் இப்படியே இருந்து சாகவேண்டியதுதானா? என்று கேட்டால் “இப்போது முதலாளிக்காக கடுமையாக உழை; அடுத்த ஜென்மத்திலாவது உனக்கு நல்வாழ்வு கிட்டும்; கடவுள் ஆசி நிச்சயம் கிடைக்கும்” என்று மதத்தை தங்களுக்கு துணை சேர்த்துக் கொண்டனர். இவ்வாறு தொழிலாளி வர்க்கம் தனது கஷ்ட வாழ்வை தலை எழுத்து என நம்பியது. விடிவுக்கு ஏங்கியது! 

மார்க்சியம் தான் நமது அரசியல்  தத்துவம்: 

  மனித குலம் தோன்றியதிலிருந்தே வறுமை,பஞ்சம் ஏழ்மை, பிணி என சிக்கித் தவித்து வந்தது. அதற்கான காரணங்களை தங்களது தத்துவங்களால் விளக்கினர் பல தத்துவ ஞானிகள் .வியாக்யானம் செய்தனர். ஆனால் அதை மாற்றுவதற்கான விஞ்ஞான பூர்வமான தத்துவத்தை 
முன் வைக்கவில்லை. 

“தொழிலாளி வர்க்க ஆசான் காரல்மார்க்ஸ்” தான் உலகை மாற்றியமைப்பதற்கான தத்துவத்தை “கம்யூனிஸ்ட் அறிக்கை” மூலம் 1848-ல் முன் வைத்தார். அது தான் மார்க்சியம். தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினால் தான் ஏழ்மை-வறுமையற்ற “எல்லோருக்கும் எல்லாம்” என்ற சமத்துவ சமுதாயம் மலரும் என்ற உண்மையை வெளிப்படுத்தினார். எனவே மார்க்சியம் தான் நமது அரசியல் தத்துவம் என்பதை நம்போன்ற தொழிலாளி வர்க்கத்தை உணரவைத்தார். நான் ஆட்சி அதிகாரத்தை  கைப்பற்ற முடியுமா? அதன் மூலம் ஏழ்மை சுரண்டலற்ற சமூகம் படைக்க முடியுமா? என்று சந்தேகத்தோடு கேள்விகள் எழுப்பிய தொழிலாளியைப் பார்த்து உனக்குத்தான் அந்த வலிமை உண்டு. நம்பிக்கையோடு செயல்படு; இழப்பதற்கு ஒன்றுமில்லை “பொன்னுலகம் உனக்காக காத்திருக்கிறது என்று நம்பிக்கை ஊட்டினார். தொழிற்சங்கங்கள் தான் அதற்கான அடித்தளம்” என்பதையும் அறுதியிட்டு உரைத்தார். தொழிலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தெரிந்தது. புதிய உலகைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

தொழிற்சங்கங்களின் தோற்றம்: 

மார்க்சிய தத்துவத்தால் கவரப்பட்டு 1864-க்குப் பிறகு தான் தொழிற்சங்கங்கள் தோன்றின. “தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலை வாழ்விற்கு தேவையான சம்பளம்  தொழிற்சங்க உரிமைகள் மற்றும் வேலைக்கு பாதுகாப்பு” என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களை துவங்கினர். முதலாளித்துவம் ஆடிப்போனது. அரசுகளை துணைக்கு அழைத்துக் கொண்டது. போராட்டங்களை அடக்க வன்முறையை ஏவிவிட்டது. ஆனால் போராட்டக்குரல் ஓங்கி ஒலித்தது. 

செங்குருதியில் தோய்ந்து சிவந்த கொடிகள்:

இக்கால கட்டத்தில்தான் அமெரிக்காவின் தொழில் வளர்ச்சியடைந்த நகரமான சிகாகோவில் 1886 மே 1-ல் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். “எட்டு மணி நேரம்
Albert Parsonsfounder of the International Working People's
Association (IWPA). Parsons
, with his wife 
Lucy and their
 children, led a march of
 80,000 people down
 
Michigan Avenue
தான் வேலை 
செய்வோம்” என முழங்கினர்.பேரணி மிக அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது . கூலிக்கு வேலை பார்க்கும் உனக்கு இவ்வளவு திமிரா  என அடக்குமுறையை ஏவியது அரசு. துப்பாக்சூடும் குண்டாந்தடியும் தான் உனக்குப் பரிசு என உறுமினர். முதலாளிகள். இதில் 4 தொழிலாளிகள் உயிர் இழந்தனர் . பல்லாயிரக்கணக்கில் காயமடைந்தனர். அவர்கள் கரங்களில் ஏந்திய கொடிகள் தரையில் சரிந்தன. அங்கு ஓடிய செங்குருதியில் தோய்ந்து அவை சிவந்தன. அவர்களின் உடலிலிருந்து கொட்டிய ரத்தம் எங்கும் சிதறி ஓடியது. 

அமைதியான பேரணியும் போலீசின் சதியும்:

தங்கள் மீது தொடுக்கப்பட்ட கடுந் தாக்குதலால்  மேலும் ஆத்திரமடைந்தனர். தொழிலாளர்கள். யாரும் தாக்குதலுக்கு பயந்து ஒதுங்கி ஒளியவில்லை. இந்த கொடுஞ்செயலைக் கண்டித்து மே-4ல் ஹேமார்க்கட் ஸ்கொயரில் ( Hay Market Square) கூடினர். தலைவர்கள். ஒருவர் பின் ஒருவர் ஆவேசமாகக் கண்டனக் குரல் எழுப்பினர். ஆவேசமாகப் பேசினர். கூட்டம் அமைதியாகத் தான் நடந்து
The first poster calling for a
rally in the Haymarket on May 4. 
கொண்டிருந்தது. கூட்டத்தினரை ஆத்திரமூட்ட ஏற்கனவே ஆளும் வர்க்கம் தீட்டிய சதித்திட்டத்தின்படி போலீசார் கூட்டத்தினரை நோக்கி சுட்டனர். கலவரமானது. போலீசார் சிலரும் தொழிலாளர்கள் பலரும் பலியாயினர். 200-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 


தூக்குமேடை முழக்கம்:
தொழிற்சங்கத் தலைவர்கள் 8 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது. எந்த ஆவணமோ  சாட்சியங்களோ இல்லாமல் 5 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முதலாளிகளுக்கான அரசின் நீதி நிர்வாணமானது. தூக்கிலிடப்படுவதற்கு முன்பே ஒருவர் இறந்துவிட்டார். தூக்கிலிடப்பட்டவர்கள் தோழர்கள் “ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல்,அடால்ப்பிஷர். நாம் இன்று அனுபவித்துக்
Engraving of the seven leaders
 sentenced to die forPolice officer;s  murder.
An eighth defendant, not shown here,
was sentenced to 15 years in prison.
கொண்டிருக்கிற 8 மணி நேர வேலை என்ற சலுகைக்காக அன்று உயிர்த்தியாகம் செய்த தொழிற்சங்க தியாகிகள் அவர்கள். வாழும் வரலாற்றாய் இருப்பவர்கள். 
தூக்குமேடை ஏறிய போது நெஞ்சுரத்தோடு தோழர் ஆகஸ்ட் ஸ்பைஸ் “இன்றைக்கு எங்களது குரல் வளைகள் நெறிக்கப்படலாம்ää குரல்கள் அமுக்கப்பட்டு மௌனம் இப்போதைக்கு எழலாம். ஆனால் நிச்சயம் ஒரு காலம் வரும். அப்போது இந்த மௌனமே பேரோசையாய் வெடிக்கும். அதற்கான காலம் நிச்சயம் வரும்” என்று முழக்கமிட்டார். அவரது நம்பிக்கைää தியாகம் வீண்போகவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் தொடர் போராட்டங்களால் உலகமெங்கும் எட்டு மணி நேர வேலை என்பது நமது உரிமையாகிவிட்டது. மே தினத் தியாகத்திருநாளில் அத்தியாகிகளை நினைவு கூர்வோம். 
மண்ணுக்கேற்ற மார்க்சியம்:
மார்க்சியத் தத்துவத்தை ரஷ்யாவில் நடைமுறைப்படுத்த “தொழிலாளி வர்க்க ஆட்சி” மலரச் செய்தவர் மாமேதை லெனின். “ஆகா என்று எழுகுதுபார் யுகப்புரட்சி” என்றான் பாரதி. ஆனால் முதலாளித்துவ சக்திகளாலும்ää ஒருசில நடைமுறைத் தவறுகளாலும் சோவியத் அரசு 90 களின் ஆரம்பத்தில் வீழ்ந்தது. மார்க்சியம் பொய்த்துவிட்டது என குதூகலித்தனர். முதலாளித்துவ சிந்தனையாளர்கள். 

மார்க்சியம் விஞ்ஞானப்பூர்வமான தத்துவம். “மாறாதது ஏதுமில்லைää மாற்றத்தை தவிர” என்று சொன்னதல்லவா அது. எனவே மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு அந்தந்த நாட்டு கலாச்சார மரபுகளுக்கேற்ற “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” உருவாகி வருகிறது. தென் அமெரிக்க நாடுகளே அதற்கு உதாரணம்.

பகாசுரக்கம்பெனிகளின் சந்தைக்காடா?
ஆனாலும் கூட சோவியத் வீழ்ச்சிக்குப் பின் இன்றைய உலகம் அமெரிக்க முதலாளித்துவத்தின் உண்மையிலான ஒற்றை உலகமாகவே (Unipolar World ) உள்ளது. லாபம்! மேலும் லாபம்!! மென்மேலும் லாபம்!!! என்பதே முதலாளித்துவத்தின் நோக்கம். அதை வளர்க்கவே WTO, World Bank, IMF போன்றவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. தனியார்மயம், தாராளமயம்    உலகமயக் கொள்கைள் மூலம் அவற்றை அமலாக்கம் செய்கின்றன. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் வளர்ந்து வரும் நாடுகளை வெறும் சந்தையாகத் தான் பார்க்கின்றன. அவற்றின் சுய பொருளாதாரக் கொள்கைகள் தகர்க்கப்பட்டு(Neo-economic Policies) புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் உலகமயம் என்ற பேரில் திணிக்கப்படுகின்றன. இதனால் தான் அரசின் பென்ஷன் மறுப்பு, ஆள் குறைப்பு போன்றவற்றால் நாம் அவதிப்படுகிறோம். “நாட்டைக் காக்க ராணுவம், மக்களை மேய்க்க போலீஸ்” என இரண்டு துறை தவிர எதையும் அரசு தன் வசம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்கிறது முதலாளித்துவம். அதன் வர்க்க நலன்களும்  தொழிலாளிகள் வர்க்க நலன்களும் முரண்படுவதால் முதலாளித்துவ வளர்ச்சி என்பது தொழிலாளி வர்க்கமாகிய நம்மை கசக்கி
Haymarket Martyrs Monument in Forest
Home Cemetery
நசுக்குவதிலும்ää உரிமைகளைப் பறிப்பதிலுமே முடிகிறது. எனவே தான் முதலாளிகளின் லாப வேட்டைக்குத்தான் Contratualisation of Labour(ரெகுலராய் ஆள் எடுக்காமல் காண்ட்ராக்ட் மூலம் பணி செய்தல்) Outsourcing (வெளியிலிருந்து ஆள் எடுத்தல்) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 


இந்த பாதகங்களைக் களைய நாம் ஒன்றுபட்டு போராட வேண்டியது அவசியம். ஆனால் தொழிலாளி வர்க்கம்,வர்க்க உணர்வுகள் ஏதுமின்றி அரசியல் ரீதியாக பிளவுப்பட்டுக் கிடக்கிறது. அதையே முதலாளித்துவ சிந்தனையாளர்கள் பயன்படுத்தி தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதில் வெற்றி காண்கின்றனர். எனவே இன்றைய காலத்தின் கட்டாயம் ஒற்றுமையே! ஒற்றுமையே நம் பலம். எனவே வர்க்க உணர்வோடு “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு” என்ற மகாகவியின் வரிகளைப் பாடியபடி பீடு நடைபோடுவோம். “எதிர்காலம் நமதே!” என்ற நம்பிக்கை ஒளி பிறக்கட்டும். குன்றென நிமிந்து போர்ப்பரணி பாடுவோம்! 
இன்குலாப் ஜிந்தாபாத்
தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்!

கருத்துகள் இல்லை: