ஆகஸ்ட் 06, 2012

என் நினைவில் போற்றக்கூடிய தோழர் ஆதிமூலம்....!

http://www.facebook.com/shaaanavas
My letter to my comrades
At Manamadurai
வணக்கம் தோழர்களே

நான் J .அப்துல் காதர்.இன்று பிரிவு உபசார விழா நாயகர் தோழர் ஆதிமூலத்தின் உற்ற நண்பன் அவருடன் சுமார் 14 வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன்.அவர் எனது உற்ற தோழர் எனச் சொல்லிகொள்வதில் பெருமை பட்டுக் கொள்ளக்கூடிய பல விசயங்கள் இன்றும் எனது நினைவில் மாறாமல் இருக்கிறது.

படித்து விட்டு வேலைக்கு வந்த புதிதில் அவருடன் ஒரே அறையில் நானும் தோழர் K .செல்வராஜும் ஒன்றாகத் தங்கியிருந்தோம்.எளிமையும் உண்மையும் உயர்ந்து நிற்கும் தலைவர் கே.ஆர்.

ஒரு சிறிய புள்ளியான மானா மதுரையை மாநில அளவில் பிரபலமுள்ள பெரும்புள்ளியாக்கி சாதனை படைத்தவர்.அவர்தான் எங்களுக்கு தோழர் ஆதிமூலத்தை அடையாளம் காட்டினார்.

தோழர் K.செல்வராஜ்,தோழர் P.கருணாநிதி,தோழர் சிவசங்கரன் கூடவே நானும் தேநீர் கடைகளில் விவாதங்களில் ஈடுபட்டுவிட்டு தோழர் ஆதிமூலத்தின் முடிவுக்கு பல தடவை வந்து சேர்ந்திருக்கிறோம்.

இனம் மதம் என்ற சாயங்கள் நாம் விரும்பா விட்டாலும் பல சமயங்களில் நம் மீது திணிக்கப்பட்டு விடுகின்றன.கிடையாடுகளை துண்டு துண்டாக பிரித்து சாதி வேலிக்குள் அடைத்து தொழிற் சங்கங்களுக்கு கேடு விளைவிக்கும் தன முகத்தை காட்ட எத்தனித்தபோது தலைவர் கே.ஆர் ஆதிமூலம் என்ற சாட்டையை எடுத்து விளாசி அவைகளை விரட்டியடித்த காட்சி நான் புலம் பெயர்ந்து பலஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதை ஒட்டிய பல ஞாபகங்கள் நினைவில் அலை மோதிக்கொண்டே உள்ளன.

என் நினைவில் இரண்டு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் தோழர் ஆதிமூலம் எப்போது தூங்குவார் என்பது தெரியாது.காலையில் எப்பொழுதும் நான் ரசிக்கும் அழகான கையெழுத்துடன் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய ஊர்களின் பட்டியலோடு வந்து நிற்பார்.

ஒருங்கிணைப்பு என்பது வெறுமனே வேலையில் திரள்வது அல்ல.தோழர்களை ஒன்றாகத் திரட்டி தங்களுக்குள் ஒற்றுமையின் அவசியம் குறித்து புரிதலை உருவாக்குவது,

போராட்டம் முழுமையாக இருந்தால் நம்முடைய கத்தி கூர்மையாக இருக்கும் எங்காவது தொய்வு வந்துவிட்டால் முனை மழுங்கிய கத்தியாகிவிடும் என்று தோழர் C .R அவர்கள் மேடையில் முழங்கும்போது தோழர்களின் உணர்வுபூர்வமான கைதட்டுதல் கேக்கும் அதேபோல் தோழர் ஆதி மாநில மாநாடுகளில் கை தட்டுக்கள் பெற்ற போது அவருடன் இருப்பதே எனக்கு பெருமையாக இருந்திருக்கிறது

இந்த அநேரத்தில் p S.பாண்டியன்,ராஜேந்திரன்,சிவசங்கரன். கே.செல்வராஜ் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை உங்களுக்கு நான் சொல்கிறேன்.

தொழிற்சங்கத்தில் பொருளாளர் பதவியை இரண்டு தடவை நான் வகித்திருக்கிறேன்.ஆனால் என் வேலையை தன செயலர் பதவியுடன் சேர்த்துப் பார்த்தவர் தோழர்.ஆதிமூலம்தான்.

நான் அங்குபணிபுரிந்த காலங்கள் என் வாழ்வில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தினாலும் தலைவர் கே.ஆர் மற்றும் மானாமதுரை தோழர்கள் எனக்களித்த பாடங்கள் என்னை ஒரு சிந்தனையுள்ள பக்கத்திற்கும் செல்ல தூண்டியவை.

மானமதுரை கோட்டத்தின் வரலாற்றில் மட்டுமல்ல தொழிற்சங்கத்தின் முகத்தை உணமையாக பிரதிபலித்த பல தோழர்களின் வரிசையில் நான் என் நினைவில் போற்றக்கூடிய தோழர் ஆதிமூலம்....

அவருடன் விவாதித்த விசயங்கள்,கலை இலக்கிய பெருமன்றத்தில் நாங்கள் போட்ட நாடகங்கள், ...அவருடைய குடும்ப நிகழ்வுகளுக்கு திருநெல்வேலி சென்ற நினைவுகள் எஸ் பி கள் இவர் அதிரடி கேள்விகளால் நிலை குலைந து கொட்டத்தை விட்டு ஓடியது

இப்படி தோழர்களே பல நினைவுகள்...ஒரு நாவல் எழு த முடியும்

காலச்சுவடு ஆசிரியர் குழுவின் திரு சலபதி நான் எழுதிய இரண்டு புத்தகங்களை படித்துவிட்டு எழூ த்து துறையில் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்று கேள்வி கேட்டார்

என் வாழ்வின் வழிகாட்டி கே ஆர்

தோழர்கள் ஆதி கே ஸ் பிக்கே பிஎஸ்பி என்று சொன்னேன்

அவருக்கு அவைகள் புரியாத பெயர்கள்

ஆனால் எனக்கும் மானாதுரை தோழாகளுக்கும் சடடென்று நினைவில் வரும் பெயர்கள்



தோழர் ஆதி சாதித்துக் காட்டியவர்....மானாமதுரை இளைய தோழர்களுக்கு

அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன

தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நன்றி

கருத்துகள் இல்லை: