பிறந்த நொடியில் பெற்றோரை
நேசித்து வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில்,
கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும்
கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும்
தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள்
என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
இந்த சிறப்பு மிக்க
102 வது மகளிர் தின வாழ்த்துக்களை
பெண்மையின் வாயிலாக அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக