17.01.2012 முதல் நடை பெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பும்,போராட்ட விளக்க கூட்டங்களும்
நமது கோட்டத்தில் போராட்ட விளக்கக் கூட்டங்கள் கீழ்கண்டவாறு நடைபெற்றன.
10.01.2012 மாலை 5 மணி மானாமதுரை HPO
11.01.2012 மாலை 5 மணி திருப்பத்தூர் HSG
12..01.2012 மாலை 5 மணி திருப்புவனம் LSG
திருப்புவனக் கூட்டத்தில் நமது தலைவர்கள் மாலை ஆறுமணியிலிருந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிற தகவலைத் தெரிவித்தோம். பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்ப்படவில்லை எனில் நமது போராட்டத்தின் வீச்சை மேலும் அதிகரிக்கவேண்டும் என உறுப்பினர்களை வேண்டினோம். நமது சங்க இணையத்தளங்களில் அன்றிரவே வந்த கீழ்கண்ட செய்தி அரசின் , இலாகாவின் வீண் பிடிவாதத்தை பறைசாற்றியது.
மத்திய கூட்டுப் போராட்டக் குழுவின் அறைகூவல் கீழே தரப் பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டம் .. பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை
கூட்டுப் போராட்டக் குழு தலைவர்கள் 12.01.2012 ( வியாழன் ) அன்று நமது இலாகா முதல்வருடனும் , அஞ்சல் வாரிய உறுப்பினர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.மாலை ஆறு மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை மாலை 9 மணிவரை தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்றது.மிக முக்கியமான கோரிக்கைகளில் அஞ்சல் வாரியம் தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவில்லை.எனவே போரட்டத் தயாரிப்புகளில் மிகத் தீவிரமாக ஈடுபடுமாறு உறுப்பினர்களுக்கு மத்திய கூட்டுப் போராட்டக் குழு அறைகூவல் விடுத்துள்ளது .
INDEFINITE STRIKE FROM 17TH LATEST POSITION
- Secretary, Department of Posts, and all other Postal Board Members held discussion again with the Central JCA leaders on 12.01.2012 for three hours from 6 PM to 9 PM. On major demands Postal Board has not changed their stand. Go ahead with the strike preparations.
13.01.2012 மாலை 5 மணி இளையாங்குடி LSG
13. 01.2012 அன்று இளையங்குடி பகுதிக் கூட்டத்தில் இருக்கும்போது அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் எம். கருப்புசாமி மாநிலச் சங்கத்தை தொடர்புகொண்டு வேலைநிறுத்தம் குறித்து விசாரித்தார்.அப்போது வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்ட செய்தி அவர் மூலம் கூட்டத்தில் அறிவிக்கப் பட்டது
அனைத்துப் போராட்ட விளக்க கூட்டங்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கோட்டச் செயலர்களும், முன்ணணி தோழர்களும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
நாம் நமது சுற்றறிக்கையில் எற்கெனவே அறிவித்திருந்த கீழ் கண்ட பகுதிக் கூட்டங்கள் ரத்து செய்ய்யப் பட்டன . அதற்கான செய்தியும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
14.01.2012 மாலை 5 மணி காளையார்கோவில் LSG
16.01.2012 மாலை 5 மணி சிவகங்கை HPO
போராட்டங்களே நமது துயரோட்டும் ஆயுதங்கள். அவற்றின் முனை முறியாமல் வைத்துக்கொள்வது உறுப்பினர் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக