நவம்பர் 17, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா! தேவை இல்லையா !!


அன்பிற்கினிய  தோழர்களே 
வணக்கம் . இப்போது தமிழகத்தில் பரபப்பாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயம்கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா தேவை இல்லையா என்பது பற்றிதான் .
இது குறித்து தினமணியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் ,RSS  இயக்க ஆதரவாளரும் சுதேசி ஜாக்ரன் மன்ச் (  Swadeshi Jagaran Manch ) இன் கன்வீனருமான   திரு எஸ். குருமூர்த்திஅவர்களும் எழுதிய கட்டுரைகளை கீழே தந்துளோம் 
அய்யா நெடுமாறன் அவர்கள் தமிழர் நலன் சார்ந்து தன் கருத்துக்களைதந்துள்ளார் நியாயமான பல கேள்விகளை எழுப்பியுள்ளார் . மத்திய அரசுமுன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களது பல கருத்துக்களை  ஆதரப் பூர்வமாக மறுத்துள்ளார் 
ஆனால் இந்தியாவை இந்து தேசமாகவும் , இஸ்லாமிய தேசமானபாகிஸ்தானுக்கு எதிரான ஒரு அணு ஆயுத வல்லரசு நாடாக மாற்றவேண்டும்என்ற கனவு குருமூர்த்தியின் கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது கூடன்குள  அணுமின்சார எதிர்ப்பு ஏதோ கிறித்தவர்களின் எதிர்ப்பு போலவும்அவர் சித்தரிக்க முயல்வதும் புரிகிறது 
எது எப்படியோ ! கூடங்குளப் பகுதி மக்களின் பயத்தைப்  போக்குவது மத்தியமாநில அரசுகளின் கடமையாகும் 

அணு வல்லமையைத் தடுக்கும் தீய சக்திகள்!  ---  எஸ்.குருமூர்த்தி 
தினமணி 17 .11 .2011 

தமிழ்நாட்டில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம்,சின்னத்திரையில் வரும் சீரியல்போல கடந்த சில வாரங்களாகத் தொடர்கிறது. ரூ.13,000கோடியில் கட்டப்பட்டுள்ள அணு மின் நிலையத்தின் உண்மை நிலையை உணராமல், சிலஊடகங்கள், செய்திகள் இல்லாமல், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரானபோராட்டத்தையே பிரதானப்படுத்தி ஒளிபரப்பி வந்தன. ஆனால், இப்போது அவை அதைக்குறைத்துக் கொண்டுவிட்டன.
திரையரங்கில் கதவு எப்போது திறக்கும்? டிக்கெட் எப்போது கொடுப்பார்கள்? படம் எப்போதுஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதுபோல், அணு மின்சாரத்தின்தேவையை உணர்ந்த பெரும்பாலானோர், கூடங்குளம் அணு மின் நிலையம் இன்றுசெயல்படத் தொடங்குமா? அல்லது நாளை செயல்படத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில்உள்ளனர்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தில்லியில் அண்ணாஹஸôரேயும் அவரது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும் நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தை நிமிடத்துக்கு நிமிடம் படம்பிடித்துக் காட்டிய ஊடகங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பின.கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட்டால் தங்கள் வாழ்வுரிமை பாதிக்கப்படும், அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்என்ற நோக்கில் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதை ஊடகங்களும்பெரிதுபடுத்தின. ஆனால், கூடங்குளம் அணு மின் நிலையத்தைச் செயல்படவிடக்கூடாதுஎன்ற கோணத்தில் இதற்குக் கதை எழுதி, இயக்கி, நடிப்பதற்கு சிலர் நீண்டகாலமாகவேதயாராக இருந்தனர் என்பதுதான் உண்மை.
கூடங்குளம் அணு மின் நிலையம் என்பது தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்பதுஊடகங்களுக்குத் தெரியாதா என்ன? மேகாலய மாநிலத்தில் மேற்கு காஸி மலைப்பகுதியில்அணு மின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை வெட்டி எடுப்பதற்கு ஓர் அமைப்புதடையாக இருந்து போராட்டம் நடத்தி வருகிறது. அந்த நாடகத்தை நடத்திஇயக்குபவர்களும், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும்ஏறக்குறைய ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
கூடங்குளத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் இந்தியாவில் அணு மின் நிலையம்உருவாகக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள். மேகாலய மாநிலம்,மேற்கு காஸி மலைப்பகுதியில் யுரேனியம் வெட்டி எடுக்கத் தடையாக இருப்பவர்கள்,இந்தியா அணுசக்தி வல்லமை பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.இதை இயக்குபவர்கள் யார்? இதில் நடிப்பவர்கள் யார்? இவற்றின் பின்னணியில்இருப்பவர்கள் யார்?
இந்தியாவுக்கு அணு மின்சாரமும் தேவை; அணு ஆயுதங்களும் தேவைதான்.இவையெல்லாம் சேர்ந்ததுதான் அணுசக்தி தொழில்நுட்பம். உலகில் 22,000 அணுகுண்டுகள்இருக்கின்றன. இவற்றில் 8,000 அணுகுண்டுகள் பரஸ்பரம் எதிரி நாடுகளின் இலக்காகவைக்கப்பட்டுள்ளன. சீனாவிடம் 240 அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவை இலக்காகக் கொண்டு தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானிடமும் 80 அணுகுண்டுகள் உள்ளன. அந்த நாடும் இந்தியாவைக்குறிவைத்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்குக்கும்குறைவாக அதாவது, 100 அணுகுண்டுகள்தான் நம்மிடம் உள்ளன. அணுசக்திதொழில்நுட்பத்தில் இந்தியா வல்லமை பெறவேண்டும் என்பது குறித்து எவரும்கவலைப்படவில்லை.
நமது எரிசக்தி பாதுகாப்பு என்பது பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியுள்ளது; அதுஅபாயமானதும்கூட. எண்ணெய், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை நாம் பெரும்பாலும்வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்மதிப்புள்ள எரிசக்தியை நாம் இறக்குமதி செய்கிறோம். நிலக்கரி மட்டும் 100 பில்லியன் டன்இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மட்டும் 5 பில்லியன் டாலர் செலவாகிறது.
2020-ல் இதற்காகச் செலவிட வேண்டிய தொகை 45 பில்லியன் டாலராக அதிகரித்துவிடும். 2050-ல் இது 250 பில்லியன் டாலராக உயர்ந்துவிடும்.
இன்று நாம் 1,50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். இதை நாம் 2030-ம்ஆண்டுக்குள் ஆறு மடங்காக அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதாவது 9,50,000மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.
எரிபொருள் இறக்குமதி மூலம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. இந்நிலையில்உள்நாட்டிலேயே மின்னுற்பத்தியை அதிகரிப்பதுதான் ஒரே வழி. இதைச் சொல்ல மகான்கள்தேவையில்லை. மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தால் முதலில்நிற்பது அணு மின்சக்திதான்.
சரி... இப்போது அனல் மின்சாரம், அணு மின்சாரம் இவற்றுக்கிடையிலான சுற்றுச்சூழல்பாதிப்பு, மனித இழப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். அனல் மின் நிலையத்தில் நிலக்கரிமூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் போது காற்று மாசுபடுதல், மாறுபட்டதட்பவெப்ப சூழ்நிலை காரணமாக ஆண்டுக்கு 400 பேர் உயிரிழப்பதாக நிபுணர்கள்தெரிவிக்கின்றனர்.
அப்படியானால் அணு மின்சார உற்பத்தியில் அபாயம் இல்லையா என்று கேட்கலாம். அணுமின் நிலையங்களில் எப்போதாவது ஒருமுறைதான் இழப்பு ஏற்படும். கடந்த 60 ஆண்டுகளில்நான்கு விபத்துகள்தான் ஏற்பட்டுள்ளன. இவற்றின் நேரடி பாதிப்பு மூலம் 66 பேரும்,இவற்றால் ஏற்பட்ட மறைமுகப் பாதிப்புகள் காரணமாக 4,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.அனல் மின் நிலையத்தால் ஏற்படும் அபாயத்தைவிட அணு மின் நிலையத்தில் ஏற்படும்அபாயம் குறைவுதான்.
உலகில் விமான விபத்தில் ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.இந்தியாவில் மட்டும் 2007-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1.14 லட்சம் பேர்உயிரிழந்துள்ளனர். இதற்காக நிலக்கரி மூலமான அனல் மின் உற்பத்தியையோ, விமானப்போக்குவரத்தையோ அல்லது சாலையில் கார், பஸ் போன்ற வாகனங்களில் செல்வதையோதடை செய்வது நகைப்புக்குரியதாகும்.
மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அணு மின்சக்திதான் மேன்மையானது, அபாயம்குறைவானது, தெளிவானது. எதற்காக சிலர் அணு மின்சக்தியை, தீய சக்திபோல் முத்திரைகுத்துகிறார்கள்? இப்படியிருந்தால் நாம் எப்போது அணு மின்சக்தியைத் தயாரிப்பது, அணுஆயுத வல்லமை பெறுவது?
அணுசக்தித் திட்டத்துக்கு யுரேனியம் மிகவும் அவசியம். நம் நாட்டில் யுரேனிய வளம்குறைவாகவே உள்ளது. மேகாலயத்தில் காஸி மலைப் பகுதியிலும், ஜார்க்கண்ட்மாநிலத்தில் ஜடுகுடா என்ற இடத்திலும், ஆந்திர மாநிலத்தில் தும்மனபள்ளி என்றஇடத்திலும்தான் யுரேனியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் யுரேனிய வர்த்தகம் என்பது அரசியல் சார்ந்துள்ளது. இதை அணுசக்திவிநியோகக் குழு (என்.எஸ்.ஜி.) தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்புஅனுமதிபெற்ற ஒருசில நாடுகளுக்கு மட்டும் யுரேனியத்தை விற்கிறது. மேலும் இந்தநாடுகளில் உள்ள அணு உலைகளையும் இக்குழு மேற்பார்வை செய்யும். அமெரிக்காவுடன்இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே இந்த அமைப்பின் மூலம் யுரேனியம்இறக்குமதி செய்யத்தான்.
நாட்டில் உள்ள 22 அணு உலைகளில் 14, சர்வதேச அமைப்பின் மேற்பார்வைக்கு உட்பட்டது.மீதமுள்ள 8 அணு உலைகளின் மூலம் மட்டுமே அணுசக்தியை நாம் தயாரிக்க முடியும்.என்.எஸ்.ஜி. அமைப்பு மூலம் நமது அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை நாம்இறக்குமதி செய்ய முடியும். ஆனாலும் இது குறுகியகால நடவடிக்கையாகத்தான் இருக்கமுடியும். மேலும் இதற்கு செலவு அதிகம். நீண்டநாள் நாம் இதையே நம்பியிருக்க முடியாது.
அதிருஷ்டவசமாக நமது நாட்டில் யுரேனியத்துக்கு மாற்றான தோரீயத்தின் வளம் அதிகம்உள்ளது. நமது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி தோரீயத்தைப் பயன்படுத்தி அணு மின்சாரம்தயாரிக்க முடியும். அதுவரை உள்நாட்டில் கிடைக்கும் யுரேனியத்தை நாம் பயன்படுத்தியேஆக வேண்டும்.
மேகாலயத்தில் காஸி மலைப்பகுதியில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கு எதிராகநீண்டகாலமாக நடந்து வரும் போராட்டத்துக்கும், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்குஎதிராக நடந்து வரும் போராட்டத்துக்கும் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாம்தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள், இந்தியா அணு வல்லமை பெறுவதற்குஎதிரானவர்கள்.
கூடங்குளம் அணு மின் நிலையப் போராட்டத்துக்குப் பின்னணியில் கத்தோலிக்கதேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது வெளிப்படை. போராட்டத்தில் முக்கிய பங்குவகிக்கும் எஸ்.பி.உதயகுமாருக்கும், இடிந்தகரை கிராமத்தில் உள்ள பாதிரியார்ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதை நடுநிலையான செய்திகள் உறுதி செய்கின்றன.பாதிரியார் ஜெயக்குமார் போராட்டத்தை ஆதரிக்கிறார். இவருக்கு கூடங்குளம் தேவாலயபாதிரியார் தடியூஸ் ஆதரவுக்கரம் நீட்டுகிறார். கடற்கரை கிராமமான உவரியில் உள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் எஸ்.பீட்டர், இந்தப் போராட்டத்துக்குத்தனது ஆட்களை அனுப்புகிறார். இப்போராட்டத்துக்கு திருநெல்வேலி பிஷப்பும் ஆதரவுதெரிவித்துள்ளதாக கிறிஸ்தவ குருமார்கள் சிலர் கூறுகின்றனர். மொத்தத்தில்போராட்டக்காரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கிறிஸ்தவ தேவாலயம்செய்து வருகிறது.
மேகாலயத்தில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில்இருப்பது அங்கு பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவ அமைப்புகளும், அதைச்சார்ந்தவர்களும்தான். 1990-ம் ஆண்டு முதல் இன்றுவரை ஒரு கிலோகிராம் யுரேனியம்கூடவெட்டி எடுக்கப்படவில்லை. இங்குள்ள அமைப்புகள், மாணவர்களை ஆர்ப்பாட்டத்துக்குத்தூண்டி, மறியல், பேரணி நடத்தி வருவதுடன் வன்முறை மூலம் அரசு நிர்வாகத்தைசீர்குலைத்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பழங்குடியினரும், கிறிஸ்தவதேவாலயங்களின் பின்னணியில் செயல்படும் சேவை நிறுவனங்களும் போராட்டத்தில்ஈடுபட்டு, யுரேனியம் வெட்டி எடுக்கத் தடையாக இருக்கின்றன.
மேகாலயத்தில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கும், கூடங்குளம் அணு மின் நிலையம்செயல்படாமல் இருப்பதற்கும் தடையாக, பின்னணியாகச் செயல்படுவது ஒரேஅமைப்பினர்தான். இவர்களுக்கு சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதும், அங்கிருந்து பணம்வருவதும் தெரிந்த கதைதான். இந்தியா அணுசக்தி வல்லமை பெற்றுவிடக்கூடாது என்றநோக்கத்தில் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றைப்புரிந்துகொள்ளவில்லை. அதாவது, இந்தியா அணு வல்லமை பெற அவர்கள் மறைமுகமாகஉதவுகிறார்கள் என்பதுதான் அது!

அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்! --பழ. நெடுமாறன் 
 தினமணி 16 .11 .2011 

அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம்அவர்களே,
பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள்.அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள்.உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.
அணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோதுபெருமிதம்கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது அந்தப்பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டுநல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என நம்பினோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு அதனருகிலேயேபோராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல் நாளிதழில் நான்கு பக்கம் வரும்அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக் கொடுத்துள்ளீர்கள்.
கூடங்குளத்தைப் பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த அறிக்கையை எழுதிமறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம் வருவதற்கு முன்னாலேஅறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம் அணு உலையைச் சோதனைசெய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா?
அந்த அறிக்கையில் முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்துஅவர்களின் நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்தச் சந்தேகங்களை நிவர்த்திசெய்வது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடிசெய்தீர்களா? கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும் மக்களைச் சந்திக்காமல், அவர்களின்உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால் ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்குகூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப்பெருமையுடன் உறுதி தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில்மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களேதவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே ஏன்?
இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலைஅமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்வசிக்கக்கூடாது. அப்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில்அணு உலையை அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத்தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது.
கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும்மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்குஎதிராகக் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது இதன் மூலம்தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம் அணு உலையில்விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால் தப்பிச் செல்வதற்கு வசதியாகஇருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில் விபத்தே ஏற்படாது என்பதுஉண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம் என்ன?
அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக்கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல்விட்ட ஓர் உண்மை என்னவென்றால் கூடங்குளம்அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதைஅணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடிதான் முதலீடு, ஆனால், அதன் ஆயுள்காலம்முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும். இந்தச் செலவுகளையெல்லாம்மொத்தமாகக் கூட்டினால் மின்சார உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம்.அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிபட்டுப் போகிறது.
இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்குநிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம் எட்டினால்கூட2030-ம் ஆண்டுக்குள் 4 லட்சம் மெகாவாட்தான் உற்பத்தி
செய்ய இயலும். ஆனாலும் இந்த 4 லட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட்மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்றுகுறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின் மூலம்உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே, மீதமுள்ள 45 ஆயிரம்மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர, வேறு வழியில்லை என்றும்கூறியிருக்கிறீர்கள்.
இந்தியாவில் அணு ஆற்றல் துறையின்கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுக்கானஅமைப்பு, நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் எனக்கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? திறம்பட்ட ஆற்றல்பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய தொழில்நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த 10ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2,194 மெகாவாட் அளவுமின்சாரத்தைச் சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின்ஆற்றல் துறைதான்.
கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என மின்னணுவியல் துறை பேராசிரியர்முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 2011 முதல்2015-க்குள் 19 ஆயிரம் மெகாவாட் மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல்துறை.
இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின்உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில்நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம் பயன்படுத்த முடியும் என்றுகுறிப்பிட்டிருக்கிறீர்கள்.
யுரேனியத்தைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டதுதோரியம் என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும்அணு ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில்குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதைநீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான் தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்திசெய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை, வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறதுஎனக் கூறும் நீங்கள் அந்த ஆராய்ச்சி முற்றுப் பெறும்வரை பொறுத்திருக்கக்கூடாதா?அதற்குள் அவசரப்பட்டு ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்திகூடங்குளம் அணு உலையைச் செயல்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்?
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ. 200கோடி செலவில் "புரா' திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதாவதுநகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும்.
1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத்நாட்டுக்குமிடையே உடன்பாடு கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.கூடங்குளம் பகுதி மக்கள் மீது 22 ஆண்டுகாலமாக ஏற்படாத கரிசனம் மத்திய அரசுக்குஇப்போது திடீரென ஏற்படுவானேன்?
22 ஆண்டுகாலத்துக்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின் வளர்ச்சியிலோ, ஏழ்மைநிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ, இந்திய அரசுக்குக் கொஞ்சமும் கவலைஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களைச்சரிக்கட்டத்தானே இந்தப் "புரா' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது?
அணு சக்தி என்பது இறைவன் மனித குலத்துக்குக் கொடுத்தது. அதை வரம் ஆக்குவதும்சாபம் ஆக்குவதும் மனித குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின்மூலமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும்உற்பத்தியாகும் அணு மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை என உங்கள் அறிக்கையில்அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.
ஆனால், இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் .கோபாலகிருஷ்ணன் கைக்கா, நரோரா, தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்துஇடங்களிலும் உள்ள அணு உலைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோஊழியர்களின் கவனக்குறைவினாலேயோ அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிகஅளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும், கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறிசுற்றுச்சூழலில் கலந்துள்ளது என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.இந்திய அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்குஇதுவரை எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்?
இனி தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைப் பிரச்னைக்கு வருவோம். தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும்.இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில்4,000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பதுதமிழகத்துக்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுதிருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில்தேனைத் தடவ முயற்சி செய்திருக்கிறீர்கள்.
உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரிநீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையைஇடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம்மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில்
50 % மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போலகூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்படஇருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும்அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?
ஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டைமாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடியூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய்வேலியில் உற்பத்தியாகும்மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குஅவசியம் இருக்காதே.
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில்நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும்அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிலஆண்டுகளுக்கு இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம்வழங்கப்படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல்மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும்.அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும்குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
காவிரியில் பெருகிவரும் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம்பெருக்கவும் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால், மக்களுக்கு அபாயத்தைஅளிக்கும் கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும்கல்லணையையும் எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருத்தமற்றதாகும்.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். அதைநீங்கள் ஏன் உணரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

நன்றி --  தினமணி 

கருத்துகள் இல்லை: