Tuesday, 19 July 2011
தபால் அலுவலகம் மூலம் உதவி தொகை -கிராமப்புற பயனாளிகள் எதிர்பார்ப்பு
அரசு வழங்கும் உதவி தொகையை வங்கிகளில் பெறுவதில் சிரமம் அதிகம் இருப்பதால் தபால் அலுவலகம் மூலமே வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி மு க தலைமைலான அரசு முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வரும் உதவி தொகையை ஆயிரம் ரூபாயாக அதிகரித்து ஜூன் மாதம் முதல் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. இது தவிர மாற்று திரானாளிகள், மற்றும் மாணவர்களுக்கான் கல்வி உதவி தொகை என பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கபடுகிறது.இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கடந்த காலங்களில் தபால் அலுவலகம் மூலம் தரப்பட்டன . தமிழக அரசு உதவி தொகையை செப்டம்பர் மாதம் முதல் வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் இதுவரை உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவி தொகையை காசோலையாக தராமல் அவற்றை நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தவும் முடிவு செய்துள்ளது. இதனால் உதவி தொகை பெற முதியோர்கள் மாதந்தோறும் வங்கிகளுக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தது. கிராமங்களில் வசிப்பவர்கள் நகர்புறத்தில் உள்ள வங்கிகளுக்கு உதவி தொகை பெற பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மூலம் A T M கார்டுகள் வழங்கபட்டாலும் உதவி தொகை பெரும் பெரும்பாலான பயனாளிகள் முதியவர்கள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதால் பணம் எடுக்க மற்றவர் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும் . இது குறித்து பயனாளி ஒருவர் கூறுகையில் தபால் மூலம் வழங்கப்படும் உதவி தொகை நாங்கள் வசிக்கும் இடத்துக்கே வந்து சேரும் . வங்கிகளில் பெற வழிவகை செய்தால் நகர்புறத்தில் உள்ள வங்கிகளுக்கு மாதம் தோறும் செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படும். எனவே தபால் அலுவலகம் மூலமே உதவி தொகை வழங்கும் நடைமுறையை செயல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். நன்றி : காலைகதிர்-19.07.2011

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக