திறந்த மடல் !.
அஞ்சலக ஊழியர்கள் தலையில் குமுதம் / ஆனந்த விகடன் / பால் கார்டு/சிம் கார்டு / தயிர் கார்டு ... .. இத்தியாதி ...... இத்தியாதி .... என விற்பனைக்கு கட்டினீர்கள் ! "இதிலெல்லாம் கமிஷன் வருகிறது" என்று கூறினீர்கள் !பொதி சுமக்கும் மாடு போல எல்லாவற்றையும் சுமந்தோம் அப்பாவி அஞ்சல் ஊழியர்கள் நாங்கள் ..... கேட்டால் அஞ்சல் துறையின் நட்டத்தை ஈடு கட்ட இதையெல்லாம் செய்யவேண்டும் என்று கூறினீர்கள் ! நாங்களும் பொறுப்பான ஊழியர்களாக முணுமுணுப்பு கூட எதுவுமில்லாமல் பொதி சுமந்தோம் !
ஆனால் இதற்கான கணக்கு எதுவும் எங்கள் வேலைப் பளுவில்
என்றைக்குமே சேர்த்ததே இல்லை ! எதற்கு எல்லாமோ தினம் தினம்
புள்ளி விபரம் கேட்கும் நமது துறையோ இதற்கு எல்லாம் புள்ளி
விபரம் கேட்டு அந்த வேலைப்பளுவுக்கான ஊழியர் எதுவும் நியமனம்
செய்யவே இல்லை !சரி . வரும் கமிஷனிலாவது இன்சென்டிவ் .... இன்சென்டிவ் .... என்று கூறுவார்களே ..... அதுவாவது கொடுப்பார்கள் ... மனதுக்கு ஆறுதலாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ! அதுவும் கூட இல்லவே இல்லை !
EB BILL - உம் வந்தது! கிராமத்துக் கூட்டம் எல்லாம் போஸ்ட் ஆபீசில் தான் என்று ஆனது ! அதற்கும் இன்சென்டிவ் இல்லை . AGENCY வேலைக்கு எல்லாம் என்னதான் கணக்கு ? ஊழியர் குருதி இப்படி
இலாக்கா உறிஞ்சலாமா என்று மனம் நொடிந்து போனோம் ?
ஆகட்டும்...... என்று இருந்தபோது ... இப்போது "ஆதார்" கார்டும்
வந்துவிட்டதே ! இதற்காவது இன்சென்டிவ் உண்டா ?
எதற்குமே இல்லவே இல்லையா ?
நட்டத்தை(?) ஈடு கட்டஅஞ்சல் ஊழியர்கள் ' வேலைப் பளு'
கணக்கிலும் இல்லாமல் 'இன்சென்டிவ்' கணக்கிலும் இல்லாமல் .... காலங்காலமாக இந்த கன்னித்தீவு மண்ணுக்கே உழைக்கணுமா '
என்ற "ஆயிரத்தில் ஒருவன்" சினிமா வசனம் போல உழைக்கணும்
என்றாலும் உழைக்கத் தயாராக இருக்கிறோம் !
ஆனால் மேளாக்கள் என்றும் பார்ட்டிகள் என்றும் CONTRACT கள்
என்றும் சுவாமி மலை சாமி சிலைகள் என்றும் கரூர் துண்டுகள்
என்றும் கோடியக்கரை கோலாகலங்கள் என்றும் பிச்சாவரம்
பீச்சுகள் என்றும் தோகைமலை தோட்டங்கள் என்றும் இலாக்கா பணம் கோடிக்கணக்கில் நட்டத்தின் மேல் நட்டமானபோது யாருக்கும் நாட்டமே இல்லாமல் போனது வேதனையல்லவா ? இது என்ன " கணக்கோ " ? இது கேள்வியல்லவே ? இலாக்காவே சோறு போடும் தெய்வம் என்றும் .... அஞ்சலகமே குடியிருக்கும் கோயில் என்றும் மாடாக உழைக்கும் ஊழியரின் மன வேதனையல்லவா ? நிச்சயம் இது உங்களுக்கு புரியும் என்று எண்ணுகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக