ஜூன் 29, 2011

! வேலை நிறுத்தம் வெல்லட்டும் !



நெருங்கி வருகிறது ஜூலை 5 ஆம் நாள் ! காலவரையற்ற
வேலை நிறுத்தம் துவங்கும் நாள் !
அஞ்சலக மூடல் ! RMS ஒழிப்பு ! ஸ்பீட் போஸ்ட் , REGISTERED போஸ்ட்
ஹப் சென்டர் , GDS ஊழியர் ENGANGEMENT RULES , மெக்கென்சி அந்நிய
நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அஞ்சல் துறை , ACCENTURE இன் கீழ்
அஞ்சலக கணினி ! எங்கு போகிறது அஞ்சல் துறை ?


முந்தைய தொலைத் தொடர்புத்துறை BSNL ஆகி மூடு விழா நோக்கி
முன்னேறுவதைப் பார்த்த பின்னுமா தயக்கம் ! இன்றில்லையேல்
என்றுமில்லை !

அஞ்சல் துறை அரசுத் துறையாக இருக்குமா ?
தனியார் துறையாய் மாறுமா ?

மக்கள் சேவை இருக்குமா ?
அஞ்சல் துறை மானம் காக்கப்படுமா ?

எல்லாம் மறந்து மண்ணாக போகுமா ?


" எரிமலை எப்படிப் பொறுக்கும் ? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ?


சிங்கக் கூட்டம் எழுந்தால் - துன்ப விலங்குகள் தெறிக்கும் !"
கவிஞனின் வைர வரிகள் மறந்தே போகுமா ?


" மறக்காது ! இது மறவர் பூமி ! வெங்கொடுமை சாக்காட்டில்
செங்குருதி சிந்தியது எங்கள் NFPE !" என்ற பதில் உன்னிடமிருந்து
கிடைக்குமா ? கிடைக்கும் என்கிறது நம் வரலாறு !
வெல்லும் என்கிறது நம் பதிவேடு !


அனைத்து உறுப்பினரையும் நேரில் சந்திப்போம் !
அனைத்து அலுவலகங்களுக்கும் நேரில் செல்வோம் !
கோரிக்கை அடங்கிய சுற்றறிக்கைகளை அனைத்து ஊழியருக்கும்
நேரில் அளிப்போம் !
போராட்டக்குழுக்கள் அமைப்போம் !
தலைவர்களை அழைத்து சிறப்புக்கூட்டங்கள் போடுவோம் !
, தொழிச் சங்கத் தலைவர்களை
நேரில் சென்று பார்ப்போம் ! கோரிக்கைகளை விளக்குவோம்!
அரசுத் துறை காக்க போராட்டத்தில் நேரில் கலந்து கொள்ள
அவர்களையும் அழைப்போம் ~! பத்திரிகைகளில் செய்திகள்
தினம் தினம் வரச் செய்வோம் !
JCA வை வலுப்படுத்துவோம் ! ஊழியர் ஒற்றுமையை
பலப்படுத்துவோம் ! தவறாக திசை திருப்பப் படுவோருக்கும்
நேரான பாதை கட்டுவோம் ! இந்தப் போர்..... நம் அனைவரின்
உரிமை காக்கும் போர் என்பதை தெளிவு படுத்துவோம் !

கருத்துகள் இல்லை: