மே 29, 2010

India post on Twitter


              நமது அஞ்சல் துறை twitter  துவக்கி உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திருந்தன . Twitter என்றால் என்ன என்பதை நாம் முதலில் அறிந்துகொண்டால்தான் , " India Post on Twitter  "  என்பதன் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம் . எனவே twitter  என்றால் என்ன என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் சிறிய விளக்கத்தை கீழே தந்துள்ளோம் .
            டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை. இதுவும் ஒரு சமூக வலைப்பின்னல் சேவையே !.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.இதை மிகத்தெளிவாகச்  சொல்வதென்றால்   "micro-blogging service"   என்று சொல்லலாம் . Tweet என்றால் பறவைகள் எழுப்பும் ஓலி என்று அர்த்தம் .அதிலிருந்து தான் Twitter என்ற வார்த்தை உருவானது.140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான
அம்சங்கள்.டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு www.twitter.com சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.
             அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும். 
             நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம். முக்கியமான நிகழ்வுகளின் மீதான நம் கருத்தை உடனுக்குடன் பதிவு செய்து பகிங்கரமாகவோ அல்லது நட்பு வட்டாரத்துக்கு தெரிவிக்கலாம் .படித்துவரும் புத்தகம் மீதான கருத்துக்களை பிறருக்குத் தெரிவிக்கலாம்.ஒரு விஷயத்தில் முக்கியமானவர் தனது ட்விட்டரில்  தெரிவிக்கும் கருத்து மீது நம் விமர்சனத்தை ட்விட்டரில்  பதிவு செய்யலாம் . ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தன் நிறுவனத்தின் முக்கிய செய்திகளைப் தனது ட்விட்டரில் பதிவு செய்யலாம் . அதன்படிதான் நமது அஞ்சல் துறை தனது ட்விட்டர்  ஐ      துவக்கியுள்ளது. அதன் இணைய முகவரி   http://twitter.com/PostOfficeIndia  சினிமா நடிகர், நடிகைகள் ,அரசியல்வாதிகள் ,இசை அமைப்பாளர்கள்   அறிவுஜீவிகள் ,பிரபல பத்திரிக்கையாளர்கள் ,எழுத்தாளர்கள் ,கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது Twitter ஐ ஆரம்பித்து தங்களது கருத்துக்களைப் பதிந்து பகிர்ந்து கொள்கிறார்கள் . நாம் நமக்குப் பிடித்தமானவர்களின் Twitter களை follow  செய்யலாம் .   அதற்க்கான வசதியும்  twitter  ல் உண்டு .சமீபத்தில் பிரபலமானது முன்னாள் மத்திய அமைச்சர் திரு சசி தரூரின் twitter  தான் .சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை வெளியிட்டதாகச் சொல்லி பல பத்திரிக்கைகளில் விவாதமே நடந்தது ....

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Very useful. Expecting more

Ananthi சொன்னது…

U have started a very wonderful service ie., keepig our Comrades technically updated. Superb Comrades! My Flaternal Salutes to Sivaganga Div.Union!

Com.Anantha Gomathy, DSM,Ambasamudram HO.

kasirajan சொன்னது…

useful hints on usage of twitter.continue the service.
MADHANA GOPAL PA VIRUDHUNAGAR